/* */

ஓஹோ..கேஜிஎஃப் சினிமா வெற்றிக்கு இதுதான் காரணமா? டைரக்டரே சொல்றார்..!

கேஜிஎஃப் 2 பட சக்சஸ் பிரஸ்மீட்டில் பிரசாந்த் நீல் இடம் கேள்வி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

HIGHLIGHTS

ஓஹோ..கேஜிஎஃப் சினிமா வெற்றிக்கு இதுதான் காரணமா? டைரக்டரே சொல்றார்..!
X

கேஜிஎஃப் 2 இந்தப் படம் கடந்த 14 ஆம் தேதி அன்று உலகெங்கும் ரிலீஸாகி தற்போது ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருது. இந்தப் படத்தின் மூலம் பிரசாந்த் நீல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இந்த கேஜிஎஃப் 2 படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் பிரசாந்த் நீல் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது தொகுப்பாளர் பிரசாந்த் நீல் இடம் எப்படி கதை எழுதினீர்கள் என கேட்ட்டார்.

அதற்கு பிரசாந்த் நீல் குடித்த பிறகுதான் நான் கதை எழுதுவேன். அடுத்தநாள் நிதானமாக இருக்கும்போது அதைப் படித்துப் பார்ப்பேன். அது எனக்கு பிடித்து இருந்தால் அதை வைத்து திரைக்கதை எழுதுவேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட சிலர், குடித்த நிலையில் தான் இப்படி எல்லாம் வெறித்தனமாக யோசித்து எழுதியிருக்க முடியும். படத்தின் ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக காட்சி படுத்தியதற்கு இதுதான் காரணமா என்றும் பிரசாந்த் நீல்லை குறித்து கமெண்ட் செய்யராய்ங்க.

அத்துடன் ரசிகர்கள் பலரும் ஓஹோ கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு காரணம் குடிதான் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த உலகில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? முன்புதான் இதனைப் பற்றி பேசுவதற்கு பலரும் தயங்குவார்கள். தற்போது அனைவருமே குடிப்பதால் இந்த விஷயம் எல்லாம் யாரும் தற்போது பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அப்படீன்னு டிபேட் நடத்தி வாராய்ங்களாம்.

Updated On: 18 April 2022 7:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை