டாடா படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் படம்! கோடியில் சம்பளம்?

டாடா படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் படத்துக்கு கோடியில் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டாடா படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் படம்! கோடியில் சம்பளம்?
X

டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த கவின் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதனிடையே அவரது சம்பளமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் அவருக்கு டபுள் மடங்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே நன்கு அறிமுகமானவர். அந்த தொடரில் வேட்டையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவின். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த தொடரில் ஆரம்பத்தில் சாதாரண கதாபாத்திரமாக அறிமுகமாகி பின் அந்த தொடரின் நாயகனாகவே உயர்ந்தார் கவின். நன்றாக சென்றுகொண்டிருந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது.


பின் சில ஆண்டுகள் மக்கள் மத்தியில் காணாமல் போயிருந்தார் கவின். அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வந்தார். ஆரம்பம் முதலே கலகலபேச்சு, கன்னிப்பெண்களுடன் லூட்டி என சாதாரணமாக தொடங்கிய இவரது ப்ளேபாய் சேட்டைகள் திடீரென மோசமானதாக மக்கள் மனதில் பதிந்தன. கமல்ஹாசனே இவரை சில முறை எச்சரிக்கையாக நடந்துகொள்ளும்படி அறிவுறுத்தும் அளவுக்கு ஆனது. அப்போதிருந்து உண்மையைப் புரிந்துகொண்டு தனது நல்ல குணத்தை வெளிக்காட்ட துவங்கினார்.


லாஸ்லியாவுடன் காதல் உள்ளிட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின், திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தினார். பிக்பாஸுக்கு பிறகு கவின் நடித்த முதல் படம் லிஃப்ட். இதில் அம்ரிதாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் முதன்முதலில் திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் இப்போது வெற்றிகரமான வரவேற்பை பெற்றிருந்த டாடா. இந்த படத்தில் கவினின் நடிப்பை தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரும் பாராட்டியிருந்தனர்.


இப்போது கவினை வைத்து இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நிற்கிறார்கள். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நிச்சயம் கவினுக்கு இருக்கிறது. நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் ஒரு படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.


கவின் நடிக்கும் அடுத்த படம் இதுதான் என்கிறார்கள். கவினுக்கு இந்த படத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறதாம். டாடா படம் வெற்றியடைந்த நிலையில் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பதாக கூறுகிறார்கள். இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்க பிரியா பவானி ஷங்கர், பிரியங்கா அருள் மோகன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். இதில் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் திரைப்படம் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் திரைப்படம் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

Updated On: 18 March 2023 7:10 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 2. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. லைஃப்ஸ்டைல்
  oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
 4. டாக்டர் சார்
  அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
 5. சினிமா
  அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
 6. தொழில்நுட்பம்
  36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
 7. இராசிபுரம்
  ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
 8. தமிழ்நாடு
  சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
 9. விழுப்புரம்
  விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
 10. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்