கவின் நடிக்கும் புதிய படம்! ஹீரோயின் யார் தெரியுமா?
டாடா திரைப்படத்தில் மிக நன்றாக நடித்திருப்பதாக தனுஷ், கார்த்தி இருவரும் பாராட்டியிருந்தனர். இது நல்ல போக்கு, கோலிவுட்டில் சக நடிகர்களின் படத்தையும், நடிப்பையும் போட்டியாக நினைக்காமல் பாராட்டுவது நல்ல குணம் என அவர்களையும் பாராட்டியிருந்தனர் ரசிகர்கள்.
HIGHLIGHTS

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின். உடன் லாஸ்லியா இருக்கிறார்
டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கரைத்து கொள்ளையடித்த கவின் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல கதாநாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கவின். அந்த தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த தொடரின் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.
பின் சில ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார் கவின். அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. பிக்பாஸ் மூலம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வந்தார். ஆரம்பம் முதலே தனது கலகலபேச்சால், பெண் ரசிகைகளை சம்பாதித்தார். பலரும் இவருக்கென ஆர்மி அமைத்தனர். பிளேபாய் இமேஜ், லாஸ்லியாவுடன் காதல் என பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை பண்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கவின், லாஸ்லியா பிக்பாஸ் புகைப்படம்
பிக்பாஸுக்கு பிறகு கவின் நடித்த முதல் படம் லிஃப்ட். இதில் அம்ரிதாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் முதன்முதலில் திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் இப்போது வெற்றிகரமான வரவேற்பை பெற்றிருந்த டாடா. இந்த படத்தில் கவினின் நடிப்பை தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரும் பாராட்டியிருந்தனர்.
இப்போது கவினை வைத்து இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நிற்கிறார்கள். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நிச்சயம் கவினுக்கு இருக்கிறது. நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் ஒரு படத்திலும் கவின் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
கவின் நடிக்கும் அடுத்த படம் இதுதான் என்கிறார்கள். இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்க பிரியா பவானி ஷங்கர், பிரியங்கா அருள் மோகன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். இதில் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் திரைப்படம் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கவின் டாடா திரைப்படம் வெளியான அன்றைய தினம் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் கோவிலுக்கு சென்று விட்டு வந்ததாக டிவிட் செய்திருந்தார். டாடா திரைப்படத்தில் மிக நன்றாக நடித்திருப்பதாக தனுஷ், கார்த்தி இருவரும் பாராட்டியிருந்தனர். இது நல்ல போக்கு, கோலிவுட்டில் சக நடிகர்களின் படத்தையும், நடிப்பையும் போட்டியாக நினைக்காமல் பாராட்டுவது நல்ல குணம் என அவர்களையும் பாராட்டியிருந்தனர் ரசிகர்கள்.