/* */

சின்னத்திரையில் என்ட்ரி ஆக போகும் விஜய் பட நாயகி கௌசல்யா

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serialசின்னத்திரையில் என்ட்ரி ஆக போகிறார் விஜய் பட நாயகி கௌசல்யா.

HIGHLIGHTS

சின்னத்திரையில் என்ட்ரி ஆக போகும் விஜய் பட நாயகி கௌசல்யா
X

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serialநடிகை கௌசல்யா.

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serialதமிழ் திரை உலகில் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. அந்த படத்தில் இவர் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை பிறப்பிடமாக கொண்ட இவர் 1996 முதல் 2000 வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serial1996 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 16' என்ற மலையாள திரைப்படம் தான் இவரது முதல் படம். இயக்குனர் பாலச் சந்திரமேனன் அவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார் .அதன் பின்னர் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களிலும் அதாவது நேருக்கு நேர், சொல்லாமலே, வேலம், பிரியமுடன், ஜாலி, பூவேலி, உன்னுடன், அயல் கதா எழுத்துக்கயனு, தாச்சிலேடத்து துஞ்சன், ஆசையில் ஒரு கடிதம், அல்லுடு காரு வச்சரு, வானத்தைப்போல், ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, ராஜகாளியம்மன், சந்தித்த வேளை, ஜேம்ஸ் பாண்டு, குபேரன், இளையவன், மனதை திருடி விட்டாய், குங்கும பொட்டு கவுண்டர், தாலி காத்த காளியம்மன், குட்டி, எங்களுக்கும் காலம் வரும்,நாரணத்து தம்புரான், சுந்தர புருஷன், திருமலை, சிவம், உதயம், மகாநதி, சூரியன் ,கௌதம் என்பது உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serialபூவேலி படத்தில் நடித்ததற்காக அவரது சிறந்த நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது.நடிகர் விஜயுடன் இவர் திருமலை என்ற படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுடனும் இவர் ஒரு படத்தில் நடித்து இருந்தார். இப்படி முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு தற்போது மார்க்கெட் இறங்கியதால் சினிமா வாய்ப்பு குறைந்து கொண்டே போனது. இதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. அதனால் அவர் சின்னத்திரையில் என்ட்ரி ஆக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay heroine going to act in sun tv serial, kausalya entry in sun tv serialசன் தொலைக்காட்சியில் ரோஜா, மகராசி, சுந்தரி, கயல், அபியும் நானும் என பல சீரியல்கள் வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருந்தாலும் இதில் சுந்தரி தொடருக்கு தான் ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சுந்தரி தொடரில் தான் கௌசல்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Nov 2022 8:52 AM GMT

Related News