ஜப்பான் பட ஷூட்டிங் இப்ப எங்கே நடக்குது தெரியுமா?
ஜப்பான் திரைப்படம் கார்த்தி நடிக்கும் 25வது படமாகும். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் கார்த்தி போஸ்டர்கள் கடந்த பொங்கல் நாளில் வெளியிடப்பட்டது.
HIGHLIGHTS

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கி வரும் ஜப்பான் திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது அடுத்த ஷெட்யூல் துவங்கியிருக்கிறது.
விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களைக் கொடுத்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றவர் கார்த்தி. இப்போது இவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம். வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விடுபட்ட இடத்திலிருந்து துவங்கும் கதை இது என்பதாலும் இதுவரை பெரிய அளவில் புரமோசன்கள் தொடங்கவில்லை என்பதாலும் படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு சற்று குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. | japan karthi movie shooting spot
இந்நிலையில், கார்த்தி இப்போது வேறொரு படத்தில் நடித்து வருகிறார். ராஜூ முருகன் japan karthi movie director இயக்கத்தில் இவர் நடிக்கும் அந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இயக்குநர் விஜய் மில்டனும் நடிக்கிறார்.
ஜப்பான் படத்தின் ஷூட்டிங் தற்போது கொடைக்கானலில் japan karthi movie shooting location நடைபெற்று வருகிறது. இயக்குநர்களின் தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகராக இருக்கும் கார்த்தி அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி இருக்கிறார். சூர்யாவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
பா ரஞ்சித், ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ் என பல இயக்குநர்களை உலகுக்கு அடையாளம் காட்டியவர் கார்த்தி. இப்போது ராஜூ முருகன் இயக்கத்தில் நடித்துவரும் இந்த படமும் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்று நம்பப்படுகிறது. |
கார்த்தியுடன் இயக்குநர் விஜய் மில்டன் இணைந்து நடிக்கிறார் எனவும் அவர்கள் நடிக்கும் காட்சி கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷெட்யூல் இந்த வாரத்துடன் முடிவடைய இருப்பதாகவும் அதன் பிறகு கார்த்தி பொன்னியின் செல்வன் புரமோசனுக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 19 நாட்கள் இதற்காக ஒதுக்கியிருக்கிறாராம் கார்த்தி.
ஜப்பான் திரைப்படம் கார்த்தி நடிக்கும் 25வது படமாகும். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருந்தது. வித்தியாசமான லுக்கில் இருக்கும் கார்த்தி போஸ்டர்கள் கடந்த பொங்கல் நாளில் வெளியிடப்பட்டது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இந்த படத்துக்கும் ஜிவிபிரகாஷ்குமாரே இசையமைக்கிறார். சர்தார் போல இல்லாமல் இந்த படத்துக்காக கொஞ்சம் கூடுதல் நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு நல்ல இசையைத் தர முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.