/* */

கமலின் கடிதத்தை மனம் நெகிழ்ந்து கொண்டாடும் இயக்குநர் லோகேஷ் கனகராஜு..!

நடிகர் கமல்ஹாசன், 'விக்ரம்' வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜு க்கு எழுதிய கடிதம், அவரை மிகவும் நெகிழ வைத்துள்ளது.

HIGHLIGHTS

கமலின் கடிதத்தை மனம் நெகிழ்ந்து கொண்டாடும் இயக்குநர் லோகேஷ் கனகராஜு..!
X

விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் நான்கு வருடங்களுக்குப் பிறகு, 'விக்ரம்' படத்தின் மூலம் திரையில் தோன்றினார் என்பதைவிடவும் அப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருக்கிறார் என்பதுதான் புருவம் உயர்த்தும் உண்மை. இன்னும் கூடுதல் சிறப்பு, தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியதும் அது கமல்ஹாசனை மகிழ்ச்சியில் மலர்த்தியிருப்பதும்தான். அந்த அன்பின் வெளிப்பாட்டை ஒரு கடிதத்தின் வழியாக லோகேஷுக்கு தெரிவித்துள்ளார், நடிகர் கமல்.

அக்கடிதத்தில், 'அன்பு லோகேஷ், உங்கள் பெயருக்கு முன்னால், 'திரு' போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை நான் எடுத்துக்கொண்டேன். இது நமக்குள் தனிப்பட்ட கடிதம் என்பதால். உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பொது வெளியில் எப்போதும் தொடரும். என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விடவும் அதிகம்.

உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதை நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூப்பை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள். விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் எப்போதும் நிறையும். - உங்கள் கமல்ஹாசன்' என அதில் லோகேஷ் மீதான தன் முழு அன்பையும் நிறையவிட்டிருக்கிறார் கமல்.

கமலின் கடிதத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ட்விட்டர்' பக்கத்தில் பகிர்ந்ததோடு, 'Life Time Settlement Letter' என்று கூறி, 'இதைப் படித்ததும், இப்போது எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டு இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நன்றி ஆண்டவரே..!' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Updated On: 7 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?