/* */

இன்னொரு 'ஜூலி' ஆக மாறி அசிங்கப்பட்ட தனலட்சுமி

Kamal portrayed me as a thief- 'பிக்பாஸ்' வீட்டில், விதிமீறலில் ஈடுபட்டு, ஸ்வீட் கடை போட்டியில் வெற்றி பெற்ற தனலட்சுமியை, வெளுத்து வாங்கினார் கமல்ஹாசன்.

HIGHLIGHTS

இன்னொரு ஜூலி ஆக மாறி அசிங்கப்பட்ட தனலட்சுமி
X

 Kamal portrayed me as a thief- தனலட்சுமி

Kamal Haasan exposed Dhanalakshmis cheating in the sweet shop task, big boss tamil 6, Kamal portrayed me as a thief, Dhanalakshmi never realize her mistake - கமல்ஹாசன், ஸ்வீட் கடை டாஸ்க்கில் தனலட்சுமி செய்த மோசடியை, நேற்றைய நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தினார்.

ஏமாற்றுவது, மோசடி செய்வது, அவமானகரமான செயல், இது பிக்பாஸ் வீட்டில் இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கமல் ஆவேசமாக கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சிறிய தவறு, வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களிடம் தொற்றிக் கொள்ளும் என்றும் கடுமையாக கண்டித்தார்.


பிக் பாஸ் வீடு பொதுவாக உளவியல் ரீதியான ஒரு பாடசாலை. அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், ஹவுஸ் மேட்ஸ் நடந்து கொள்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் நன்றாக பழகுவது, சமயம் கிடைத்தால் முதுகில் குத்துவது, முகத்திற்கு நேராக ஒன்று பேசுவது முதுகுக்கு பின்னால் ஒன்று பேசுவது, நட்புடன் பழகி காலை வாருவது, போலித்தனமான உறவு, போலித்தனமான புகழ்ச்சி, தேவையில்லாமல் ஒருவரை குற்றவாளியாக்குவது என பலவித கலவைகளை, கடந்த 5 சீசன்களில் பார்த்து வருகிறோம். இந்த 6வது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல.

கடந்த வாரம் ஸ்வீட் கடை டாஸ்க்கில் தனலட்சுமி மற்றும் அவரது அணி சார்ந்தவர்கள், நேர்மையற்ற முறையில் விளையாடி, கல்லாப்பெட்டியில் பணத்தை வைக்காமல், மறைவான இடத்தில் ஒளித்து வைத்துக்கொண்டு, கணக்கையும் சரியாக ஒப்படைக்காமல் பொய் கணக்கு கூறி, மோசடியான வகையில் டாஸ்கை ஜெயித்தார்கள். அதை கொண்டாடியும் வந்தனர். டாஸ்க் ஜெயித்ததால் தனலட்சுமி 'எவிக்சன் ப்ராசஸில்' இருந்து தப்பினார். இதனால் விக்ரமன் எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருந்தார். டாஸ்கில் மோசடி செய்து தனலட்சுமி மட்டும் வெல்லவில்லை, டீமில் இருந்த மற்றவர்களும் மோசடிக்கு துணை போனதை


கமல்ஹாசன் நேற்று தோலுரித்தார். நல்லவர் போல் வேஷம் கொண்டிருந்த ரச்சிதாவின் முகமுடியும் கிழிந்தது. அவர் கமலிடம் சங்கடப்பட்டு, சமாளிக்க முயன்றார்.

இதற்கிடையே தனலட்சுமியை, கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். நியாயமான விஷயங்களுக்கு கண்ணீர் சிந்தினால் முதலில் துடைப்பவனாக நான் வருவேன். ஆனால் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு, தவறு செய்து கண்ணீர் சிந்தினால் நான் கண்டுகொள்ள மாட்டேன் என்றும் கமல் காட்டமாக கூறினார். தனலட்சுமி போன்றவர்கள் செய்யும் செயலை, நான் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அதனால் தான் இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் தனலட்சுமியை ஒரு கருவியாக வைத்து இந்த மோசடியை நான் வெளியுலகத்திற்கு ஒரு பாடமாக சொல்கிறேன் என்று கமல் தெரிவித்தார். கறுப்பு பணம் புழக்கம் நிறைந்த தமிழ் சினிமாவில், நேர்மையாக சம்பளம் வாங்குபவன் நான். அதனால்தான், என் அழகான பெட்ரூமில் நிம்மதியாக துாங்குகிறேன். நேர்மையாக வாழ்வதே முக்கியம் எனவும், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அறிவுறுத்தினார்.


கமலின் கடுமையான கோபத்துக்கு முன்னால், தனலட்சுமி எதுவும் பேச முடியாமல் பாத்ரூம் சென்று கதறி அழுதார். அப்போது ஆறுதல் கூறிய ஆயிஷாவிடம், 'எனக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டார்' என்று தனலட்சுமி அழுதபடி கூறினார். 'திருட்டுப்பட்டம் கட்டவில்லை விதியை மீறினேன்னுதான் சுட்டிக்காட்டினார்கள்', என ஆயிஷா சொன்னார். "இது எனக்கு பெரிய விஷயமாகவே தெரியல"ன்னு மீண்டும் தனலட்சுமி கூறினார். அப்பொழுதும் கூட தான் தவறு செய்யவில்லை என்கிற மனநிலையில், தான் மோசடி செய்ததை மறந்து விட்டு, கமல் ஏதோ திருட்டு பட்டம் கட்டியது போல் பேசியது அவர் செய்த தவறை உணரவில்லை என்பதையே காட்டியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனலட்சுமி, நைசாக ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸ்சோடும் பேசிக்கொண்டு, 'நான் நியாயமாகத்தான் நடந்தேன்' என்று தன் தரப்பு நியாயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். மணிகண்டன், குயின்சி உள்ளிட்டோர் உடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது 'நான் என்ன செஞ்சிட்டேன்னு இவ்வளவு பெருசா ஆக்கிட்டாங்க ஒரு சின்ன விஷயம் கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தை வெளியே எடுத்துட்டு மறுபடியும் வச்சேன் இதை போய் பெரிய தவறு என்கிறார்களே' என்று, தான் செய்த மோசடியை வெகு சாதாரணமான ஒரு விஷயம் போல் பேசினார். அவர் இன்னும் தவறை உணரவில்லை என்பதையே அது காட்டியது. தனலட்சுமி, இந்த சீசனை பொருத்தவரை, இன்னொரு 'ஜூலி'யாக இருப்பதால், இப்படி அசிங்கப்படுகிறார் என, பிக்பாஸ் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

Updated On: 14 Nov 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...