/* */

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்த கமல்ஹாசன்

Bigg Boss 6 Tamil Kurumpadam -பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை கமல்ஹாசன் வறுத்தெடுத்த நிகழ்வுகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்த கமல்ஹாசன்
X

Bigg Boss 6 Tamil Kurumpadam -உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தமிழ் பிக்பாஸ்6 என்கிற இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கியது. தினமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே ரணகளமாக இருக்கிறது. எப்போதுமே பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்களை கொலை வெறியுடன் நடமாட வைத்துவிட்டது.

bigg boss 6 tamil kurumpadam, bigg boss 6 tamil Kurumpadam for Azeemஅதிலும் பொம்மை டாஸ்க்கின் போது செரினா தடுமாறி கீழே விழுந்தது பெரும் புயலை கிளப்பியது. அதற்கு முழு காரணமும் தனலட்சுமி தான் என்று அசீம் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று ரசிகர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் பரவ விட்டனர். அதன் மூலம் தனலட்சுமிக்கான ஆதரவும் அதிகரித்தது.

bigg boss 6 tamil kurumpadam, bigg boss 6 tamil Kurumpadam for Azeemஅந்த வகையில் இந்த வாரம் நிச்சயம் குறும்படம் உண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்கள் அனைவரையும் நன்றாக ரோஸ்ட் செய்திருக்கிறார். அதிலும் இந்த வாரம் அசீமின் ஆட்டம் ரொம்பவும் அதிகமாக இருந்தது. ஏற்கனவே போன வாரத்தில் தேவையில்லாத வேலையை பார்த்து ஆண்டவரிடம் நன்றாக குட்டு வாங்கினார்.

bigg boss 6 tamil kurumpadam, bigg boss 6 tamil Kurumpadam for Azeemகுட்டு வாங்கியும் அடங்காத அசீம் இந்த வாரமும் ஓவர் ஹீரோயிசம் காட்டி கடுப்பேற்றினார். அவரையும் ஆண்டவர் குறும்படம் போட்டு தன்னுடைய பாணியில் வச்சி செய்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒரு சம்பவமும் நடந்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் டச்சிங் ஸ்டார் ஆக இருந்த அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.

bigg boss 6 tamil kurumpadam, bigg boss 6 tamil Kurumpadam for Azeemபிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களை தடவுவது, கட்டிப்பிடிப்பது, சில்மிஷம் செய்வது, கடிப்பது என்று அருவெறுப்பின் மொத்த உருவமுமாக இருந்தவர் அசல் கோலார். அவருடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமானதை பார்த்த ரசிகர்கள் அவரை வீட்டை விட்டு விரட்டுங்கள் என்று கூறிவந்தனர். மேலும் அவருக்கு யாரும் ஓட்டு போடக்கூடாது என்றும் கூறினர்.

bigg boss 6 tamil kurumpadam, bigg boss 6 tamil Kurumpadam for Azeemஅதற்கேற்றார் போல் அவருக்கான வாக்குகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த வகையில் அசல் கோலார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் என்ன எதிர்பார்த்தார்களோ அப்படிப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் தான் இனி காட்டப்பட இருக்கிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டவர் போட்டியாளர்கள் அனைவரையும் நன்றாகவே வெளுத்து வாங்கி இருக்கிறார். அதை கண்குளிர பார்க்கவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...