/* */

மீண்டும் கமல் படத்தில் விஜய் சேதுபதி

kamal haasan next movie villain vijay sethupathi- 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, மீண்டும் உலக நாயகன் கமலுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி.

HIGHLIGHTS

மீண்டும் கமல் படத்தில் விஜய் சேதுபதி
X

kamal haasan next movie villain vijay sethupathi-எச். வினோத் இயக்கத்தில், கமல் நடிக்கும் படத்தில், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.

kamal haasan and vijay sethupathi next movie, kamal haasan next movie villain vijay sethupathi-'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் கமலுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த படத்திலும், விஜய் சேதுபதி வில்லனாகவே நடிக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், உலகநாயகன் கமல்ஹாசனின் மார்க்கெட் பலமடங்கு அதிகரித்து விட்டது. அவர் நடிப்பில் தற்போது, 'இந்தியன் 2' படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கும் இப்படத்தின் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், 'வேட்டையாடு விளையாடு 2' என, கமல்ஹாசனின் கால்ஷீட் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதவிர, விஜய் டிவியில், வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் 'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியிலும், அவர் கலந்துகொண்டு வருகிறார்.


உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படங்களின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்தவர்தான் இயக்குநர் எச்.வினோத். அஜீத்தை வைத்து தற்போது, 'துணிவு' படத்தை இயக்கி முடித்துள்ள அவர், அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தைதான் இயக்க உள்ளார். குறுகிய கால தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தை, கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்க உள்ளது.


ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்ததும், எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் கமல். இப்படத்தின் கதைக்களம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தாலும், இதில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது. 'விக்ரம்' படத்தில், வித்தியாசமான வில்லன் ரோலில் நடித்த விஜய் சேதுபதி, இந்த படத்திலும் வில்லன் கேரக்டரில்தான் நடிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இவர், ரஜினியுடன் நடித்த 'பேட்ட' படத்திலும், வில்லனாகவே நடித்திருந்தார். அதே போல், விஜய் உடன் நடித்த 'மாஸ்டர்' படத்திலும், வில்லனாகவே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், முன்னணி ஸ்டார் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிப்பதன் வாயிலாகவே, அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அதிக வாய்ப்பும் உள்ளது.


நடிகர் விஜய் சேதுபதி, ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி' பிளாக்பஸ்டர்' ஹிட் ஆன விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் தற்போது எச்.வினோத் படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Updated On: 17 Nov 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...