சிகிச்சை முடிந்தது; குணமடைந்து வீடு திரும்பினார் கமல்

kamal haasan admitted in hospital- உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் குணமடைந்த நிலையில், இன்று வீட்டுக்கு திரும்பினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிகிச்சை முடிந்தது; குணமடைந்து வீடு திரும்பினார் கமல்
X

kamal haasan admitted in hospital - நடிகர் கமல்ஹாசன்.

kamal haasan admitted in hospital, who will host bigg boss 6 tamil next week- உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன், எப்போதுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு கலைஞன். சினிமா, அரசியல் என, இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணித்து வரும் 'சகலகலாவல்லவன்'. இதுதவிர, விஜய் டிவியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' ஷூட்டிங், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, 'அரசியல்' சார்ந்த நடவடிக்கைகள் என பல வேலைகளில் 'பிஸி'யாக இருந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், திடீரென கமலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


அதனால் அவர், சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் 'அட்மிட்' செய்யப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. எனினும், சிகிச்சைக்கு பின் ஓரிரு தினங்களில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு அவர் வீடு திரும்புவார் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவாரா?, அல்லது, மருத்துவமனையில் இருந்தே தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதா? கமல் வரவில்லை என்றால் யார் தொகுப்பாளர் என பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது.


முந்தைய சீசன்களில் நடந்தது போல, கமலுக்கு பதில் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஏனெனில், கடந்த முறை கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, கமலுக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்தமுறையும் அதுபோல் நடக்க வாய்ப்பிருக்கலாம் என ரசிகர்கள் கருதினர்.

ஆனால் கமல் ஓரிரு நாளில் 'டிஸ்சார்ஜ்' ஆகிவிடுவார் என மருத்துவமனை தெரிவித்திருந்ததால், அவரே தான் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்பட்டது.


கமல் 'டிஸ்சார்ஜ்'

அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை இருந்த கமல்ஹாசன் பூரண குணமடைந்த நிலையில், இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். எனவே, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இந்த வாரமும் வழக்கம்போல, அவரே தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகி விட்டது. கடந்தமுறை கொரோனா பாதிப்பில், கமல் சரிவர பேச முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அதனால், நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் வழங்க அவரே ஏற்பாடு செய்தார்.

ஆனால் லேசான காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்புகளுக்கு மட்டுமே தற்போது கமல் சிகிச்சை பெற்று திரும்பி இருப்பதால், நிச்சயம் அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் தவற விடுபவர்கள் கூட, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கமல் பங்கேற்கும் நிகழ்ச்சியை 'மிஸ்' செய்வதில்லை. ஏனெனில், கமல் நடிப்பை போலவே, அவரது தொகுப்பு நிகழ்ச்சியும் அசத்தலாக அமைந்துவிடுகிறது.

Updated On: 2022-11-26T09:42:22+05:30

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...