/* */

உதயநிதி நடிப்பில் மிரட்டும் 'கலகத்தலைவன்' ட்ரெய்லர் வெளியீடு

"Kalaga Thalaivan Trailer- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள ‘கலகத்தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக உள்ளதாக, ரசிகர்கள் மத்தியில், பரபரப்பாக பேசப்படுகிறது.

HIGHLIGHTS

உதயநிதி நடிப்பில் மிரட்டும் கலகத்தலைவன் ட்ரெய்லர் வெளியீடு
X

"Kalaga Thalaivan Trailer- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், ‘கலகத்தலைவன்’ ட்ரெய்லர் வெளியீடு.

"Kalaga Thalaivan Trailer, kalaga thalaivan release date kalaga thalaivan cast" - உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'கலகத்தலைவன்' படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம், 'கலகத்தலைவன்' படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.


முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் த்ரில் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் ஆரவ், கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆரவ் இந்த படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது.

ஒரு மிகப்பெரிய சமூக விரோதக் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசும் இந்த படம், ஆக்சன், த்ரில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கிய படம் என்றாலே, சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற வகையில், இந்த படமும் அந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்தை, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக முதல்வரின் மகன், எம்எல்ஏ, சினிமா தயாரிப்பாளர் என்ற நிலைகளை கடந்து, ஒரு நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் உதயநிதி. காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து, உதயநிதி நடித்த படங்கள் அனைத்துமே, ஜாலியான படங்களாக இருந்த நிலையில், 'சைக்கோ' 'நெஞ்சுக்கு நீதி' ' மனிதன்' போன்ற படங்களின் வாயிலாக, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, எல்லாவிதமான நடிப்பை தரும் திரைக்கலைஞர் என்பதை உதயநிதி நிரூபித்துள்ளார். அந்த வகையில், சமூக உணர்வு மிகுந்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.


'நம்ம ஆட்டத்தை டோட்டலா கலைச்சு போட்டு, வேற மாதிரி ஆடுனது இவன்தான்டா' என்ற ஒரு 'பஞ்ச்' வசனம், 'கலகத்தலைவன்' பட ட்ரெய்லரில் வருகிறது. அதாவது, வில்லன் கூட்டத்துக்குள் நுழையும் கதாநாயகன், ஒரு கட்டத்தில், அவர்களது கண்களில் விரலை விட்டு ஆட்டுபவனாக, அவர்களது திட்டத்தையே தவிடுபொடியாக்கி விடுகிறான், என்பதையே இந்த வசனம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.

'பிக்பாஸ்' வீட்டில், முதல் சீசனில் முதல் ஆளாக 'டைட்டில்' வின்னராக வெற்றி பெற்றவர் ஆரவ். அவர், இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.

Updated On: 11 Nov 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...