/* */

வாழ்க்கையே வேணாமுன்னு போனவருக்கு அடிச்சது ஜாக்பாட்... வீசியது வசந்த காலம்...

Journey Of GP Muthu - வாழ்க்கைன்னா இப்படி இருக்குனுமுங்க.. இறந்து போய்விடலாம் என நினைத்தவர் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்.. அது என்ன?

HIGHLIGHTS

Journey Of GP Muthu
X
யூடியூப் , டிக்டாக் புகழ்  ஜி.பி. முத்து

journey of gp muthu



பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் டிக்டாக்புகழ் ஜி.பி.முத்து மற்றும் நடிகர் கமலஹாசன். (பைல்படம்)

தமிழகத்தில் உள்ள சேட்டிலைட் சேனல்கள் பல இருந்தாலும் அதில் பிக்பாஸ் தொடர் வெளியாகும் தனியார்டிவி மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்காக கடந்த 5 சீசனாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.

மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணம் காசு சம்பாதிச்சாதாங்க வாழ்க்கை. ஒருவர் கையில் தேவைப்படும்போது பணம் இல்லாவிட்டால் அது எவ்வளவு கஷ்டமுங்க.. அந்த மாதிரி நம் பாக்கெட்டில் காசு இருந்தா நமக்கு அன்றைய தினம் முழுக்க மனமானது சந்தோஷமாகவே இருக்கும். கையில் காசு இல்லாவிட்டால் தானாகவே மனம் சோகமாகிவிடும். இதுபோல்தாங்க நம்ம டிக்டாக் புகழ் நாயகனும், தற்போதைய பிக்பாஸ் 6 வது சீசனில் உள்ளே நுழைந்திருப்பவருமான மதுரைக்கார மன்னாரு ஜிபி முத்து வாழ்க்கையிலே நடந்துச்சு..,.,

இவரோட சொந்த ஊர் துாத்துகுடி மாவட்டத்திலுள்ள உடன்குடி. இவரது அப்பா கணேசன். இவருக்கு ஜி.பி. முத்துன்னு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா? இப்படி பேரை மாத்தி வச்சதால இவருக்கு இந்த வாழ்க்கையா? என பலரும் எண்ணத்தகுந்த வகையில் இவரது அப்பா இனிஸியல் ஜி. பேச்சி முத்து என்பதை சுருக்கி சார்ட்டா ஸ்வீட்டா ஜி.பி. முத்துன்னு வைச்சுக்கிட்டாருங்க.

இப்பதமிழகத்தில எந்த ஊருல இவர் பேரைச்சொன்னாலும் தெரியாதுன்னு சொல்லமாட்டாங்க. அந்த அளவுக்கு டிக்டாக் நிகழ்ச்சி வீடியோ மூலம் பிரபலமாயிட்டாருங்க.. இவர் என்னவோ இரண்டு வியாபாரம் பண்ணினாரு அது ஒன்றும் செட் ஆகல இவருக்கு. கூடப்பிறந்த தம்பியைஇழந்துவிட்ட இவருக்கு கொரோனா காலத்தில எந்த வருமானமும் இல்லாம போகவே சரி இப்படி பசி, பட்டினியோடு வாழ்ந்து என்ன பண்ணப்போறோம்னு தற்கொலை முயற்சி செஞ்சாருங்க..அதற்கு முன்னர் இவர் டிக்டாக்கில் பிரபலமாக துவங்கிய நேரம் என்பதால் இவருடைய தற்கொலை முயற்சி செய்தியும் யூடியூபில் அதிவேகமாக பரவி இவரது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிட்டது. வாழ்க்கையே வேணாமுன்னு இவர் போனாரு... அதுவும் இவரது வாழ்க்கையில திருப்பு முனையாயிடுச்சின்னா பாருங்க.

அமைத்துக்கொண்ட இவருக்கு 2 பிசினஸ் படு தோல்வி ஆனது. தனது உடன் பிறந்த தம்பியை இழந்தார். ஊரே இவரை வசை பாடியது. சில வருடங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தனக்கான தனி இடத்தை பிடித்த இவருக்கு யூடியூபில் இருக்கும் ரசிகர்கள் ஒரு மில்லியன். ஒற்றை ஆளாக இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவருடைய வீழ்ச்சியும் வளர்ச்சியும் என்ன? வாங்க பார்க்கலாம்!

journey of gp muthu


journey of gp muthu

இவரு மற்றவங்க மாதிரி பெருசா ஒன்றும் படிக்கலைங்க..3ம்வகுப்புதான் இவரது படிப்பு அதற்கு பின்னர் படிப்பு ஏறலைன்னு சொன்னவுடன் ஒரு பட்டறையில் வேலை செஞ்சாரு தினக்கூலியாக. ஒரு நாளைக்கு ரூ. 30 தான் சம்பளம்.இவரது தம்பி இசக்கி முத்து. இருவருக்கும் ஏக ரகளை நடக்கும்வீட்டில். ஒரு நாள் நடந்த பைட்டில் பிளேடைக் கொண்டு தம்பியை பல இடங்களில் கிழித்துள்ளார் இவர். பல இடங்களில் தையல் போடப்பட்டு அவர் உயிர் பிழைத்துவிடுகிறார்.

இவருக்கு முன்பாகவே இவரது தம்பி இசக்கிமுத்துவுக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. பின்னர் இவர் எவ்வளவோ கல்யாணம் வேண்டாம் என மறுத்தாலும் பெற்றோர்களும், உறவினர்களும் இவரை விடுவதாக இல்லை என்று சொல்லி ஒருவழியா கல்யாணமும் முத்துவுக்கு ஆகிறது. சரி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாச்சே.. வருமானத்துக்கு என்ன வழின்னுட்டு ஒரு பிசினஸ் செய்யறாரு. . அது சரிப்படலை.இந்த நேரத்தில்தான் இவரது தம்பி இசக்கிமுத்து ஒரு கார்விபத்தில் இறந்து போக அவரது 2 குழந்தைகளும்இவரே வளர்க்கிறார். குடும்ப கடமைகள் அதிகமாகிவிடவே மற்றொரு பிசினசில் களம் இறங்குகிறார். இதற்கு தனது மனைவியின் நகைகளை விற்று செய்கிறார். அதுவும் சரிப்படவில்லை.

பின்னர்தான் இவருக்கு ஒரு ஐடியா வந்தது. தனது மன அழுத்தத்தினைப் போக்கிக்கொள்வதற்காக டிக்டாக், யூடியூப், இன்ஸ்டா ஆகிய சோஷியல் வெப்சைடுகளில் தான்பேசிய நகைச்சுவை பேச்சுககளை பதிவிடுகிறார். அது வீடியோவாக பகிரப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றுவிடுகிறது.

அப்படி என்னடா? அது? நமக்கு இவ்வளவு வரவேற்பு? என ஆச்சர்யத்துடன் இவர் தனது பதிவு பணியை முழுநேரமாக்கிவிடுகிறார். அந்த நேரத்தில்தான் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் செய்தி வெளியாவதைக் கண்டு அதிர்ந்து போகிறார்.என்னதான் நகைச்சுவையாக பேசினாலும் அன்றாட பொழப்புக்கு காசு வேணுமே? இந்த பிரச்னை தலைதுாக்கவே சரி செத்துபோயிடலாம்னு தற்கொலைக்கு முயற்சி செய்யறாருங்க.ஆனா அவரு நினைச்சுது தாம் செத்துபோயிடுவோம்னு.,.. ஆனால் கடவுள் இவருக்கு அதன் மூலமாகவே எதிர்கால வளர்ச்சியைத் தரப்போறான்னு இவருக்கே தெரியாது...

இவருக்கே தெரியாமல் இவரது டிக்டாக் மூலமாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார். ஒருசின்ன பையன் இவரிடம் பேட்டிஎடுக்க வந்தார். முத்துவும் சரி நீங்க சின்ன பையனா இருக்கீங்க..நான்சொல்றேன்னுட்டு தன்னுடைய வளர்ச்சியை பத்தி சொல்றாரு...கேளுங்க.

journey of gp muthu

தம்பி. இப்பவெல்லாம் யூடியூப் என்பது பெரும் வியாபாரம் ஆகிடுச்சி...வியூஸ் தேடுற இந்த காலத்தில் இவர் எந்த வீடியோவுக்கும் காபிரைட் க்ளெய்ம் செய்தது இல்லை. இவருக்கு அதில் உடன்பாடும் இல்லைங்க..தன்னுடைய வீடியோவை யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளட்டும் இதுல என்ன இருக்குன்னு ஒருவீடியோல இவர் சொன்னார். gp muthu thug life என்று தேடிப்பார்த்தீர்களானால் மில்லியன் கணக்கில் வியூஸ் இருக்கிறது. அதை நீங்களும் பார்க்கலாம். இவரது அப்பா இவரை என்னதான் செய்தாரோ தெரியவில்லை. கணேசன் என்று குறிப்பிட்டு அவரை கலாய்த்தாலே இவரால் சிரிப்பை கொஞ்சம் கூட நிறுத்த முடியவில்லை போங்க...

journey of gp muthu

35 வயது வரையிலும் இவரிடம் இருந்தது வெறும் பட்டன் போன்தாங்க.. அதற்கு பின்னர்தான்இவர் ஸ்மார்ட்போனையே பயன்படுத்த ஆரம்பிச்சாரு...தமிழகம் முழுவதும் இவருக்கு பல இடங்களில் வரவேற்பு பலமாக இருக்கிறது. சிறப்பு விருந்தினராக பலநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காரணம் என்ன தெரியுமா? வடிவேலு சொல்ற மாதிரி இவரது நல்ல மனசுதாம்பா...நல்ல மனசுதான்...எங்க போனாலும் இவரைச்சுற்றி நிமிஷத்தில் 100 பேர் கூடிவிடும் நிலைமை தான் இப்போ இருக்கு...மத்தவங்க மாதிரிதான்இவரும் சிம்பிளா வாழ்ந்தாரு... ஆனா அவருக்கு எதுவுமே கை கொடுக்கல.. கடைசியில செத்துபோயிடலாம்னு எதிர்மறை எண்ணத்தோடு போனதுதாங்க இப்ப பாசிடிவ்வாயிடுச்சு... ஒரு திருப்புமுனையாயிடுச்சுன்னா பாருங்களேன்...டர்னிங் பாயின்ட்தான் போங்க... இதே மாதிரி குணத்தோடு ஜிபிமுத்து பிக்பாஸ் 6 சீசனிலும் சிறப்பா செயல்படுவாரு? குண்டக்க , மண்டக்க வேலை எதுவும் பண்ணமாட்டாருன்னு நினைக்கலாங்க... பொறுத்திருந்து பார்ப்போமாங்க...

journey of gp muthu

. தமிழ்நாடு முழுக்க இருக்கும் முக்கிய இடங்களுக்கு இவரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். பொது இடத்தில் இவர் வெளியே வந்தால் பல நூறு ரசிகர்கள் இவரை சூழ்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் இவரது நல்ல மனசும் வெள்ளந்தித்தனமும். எல்லோரைப் போலவும் இவரும் இவரது வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கிறார்தான். ஆனால், அதிலிருந்து கற்றுக்கொண்டு தன்னுடைய நெகடிவிட்டியையே பாசிட்டிவாக மாற்றிக்கொண்டதுதான் இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். இதே போல் எந்த நிலையிலும் தன்னுடைய கேரக்டரை மாற்றிக்கொள்ளாமல் இருங்க தலைவரே..!சாதாரணமாக படித்த இவருக்கு தன்னுடைய தன்னம்பிக்கையால் இவ்வளவு உயர்ந்த இடத்தினை அடைந்துள்ளாருன்னா பார்த்துக்குங்க...



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 Oct 2022 10:29 AM GMT

Related News