/* */

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே சூர்யா மிரட்டும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியீடு

Jigarthanda DoubleX Teaser Release-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவர உள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் டீசர் மிரட்டலாக வெளிவந்துள்ளது.

HIGHLIGHTS

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  டீசர் வெளியீடு
X

Jigarthanda DoubleX Teaser Release- ரசிகர்களை தெறிக்க விட்ட இயக்குநர் சுப்புராஜின் ஜிகர்தண்டா - 2 டீசர்.

Jigarthanda DoubleX Teaser Release, sj suryah and raghava lawrence jigarthanda teaser- கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். சினிமா படம் எடுக்கும் இயக்குநராக சித்தார்த் இருப்பார். இதில், மதுரையில் மிகப்பெரிய ரவுடியாக வலமவரும் பாபி சிம்ஹாவை, படத்தில் நடிக்க வைத்து, ரவுடியான அவரை, 'காமெடி பீஸ்' ஆக காட்டி, அவரை பார்த்தாலே யாரும் பயப்படாமல், விழுந்து விழுந்து சிரிக்கும்ம்படி படத்தை மாற்றியிருப்பார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் நடிகர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், டீசரில் மௌதார்கன்னுடன் 'சர்ப்ரைஸ்' கொடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதைக்கடந்து சென்றால் 'மாஸ் என்ட்ரி' கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். இருவருக்குமிடையிலான மோதல் தொடரும்போது ராகவா லாரன்ஸ் கையிலெடுக்கும் ஆயுதத்தின் ஆச்சரியத்துடன் நிறைவடைகிறது டீசர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த டீசரை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.


மிரட்டும் டீசர்

ஒரு பொட்டல் காட்டுக்குள், கோட் சூட் அணிந்து, கண்களில் கண்ணாடி, வாயில் புகையும் பைப்புடன் 'எண்டரி' ஆகிறார் எஸ்.ஜே. சூர்யா. குட்டை போல தேங்கியிருக்கும் நீர்நிலையின் பின் அமர்ந்து, எதிரே பார்க்கிறார். அங்கே ஒரு கொல்லன் பட்டறையில், சுத்தியலை எடுத்து, பழுக்க காய்ச்சிய இரும்பை அடித்துக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ். அடுத்த சில விநாடிகளில், கண்ணாடியில் தன் முகம் பார்க்கும் லாரன்ஸ், அங்கு இரும்பு சங்கிலியில் தொங்கும் ரிவால்வார்களை கையில் எடுத்துக்கொண்டு, வெளியே வருகிறார். அவரது வாயிலும் சிகரட் புகை, வெளியேறுகிறது.


எஸ்.ஜே. சூர்யாவும், லாரன்ஸ்சும் ஒருவரை ஒருவர் ஆவேசமாக பார்த்துக்கொள்கின்றனர். காதுகளில், மூக்கில் வளையம் மாட்டிய நிலையில், 'கிராமத்தான்' போன்ற கெட்டப்பில் கருப்பாக தெரிகிறார் லாரன்ஸ். அவரை பார்த்து, வில்லில் இருந்து, அம்பு விடுவதைப் போல, சூர்யா சைகை செய்ய, அதை பார்த்து லேசாக புன்னகைக்கிறார் லாரன்ஸ்.


அடுத்த விநாடி, சூர்யாவின் பின்புற பகுதியில் இருந்து காக்கி உடை அணிந்த போலீசாரும், வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, முகத்தில் வெண்மை நிறம் பூசிய ஒரு கூட்டமும் லாரன்ஸ் ஐ நோக்கி, மிக வேகமாக ஓடி வருகிறது. அப்போது, சிரித்தபடி லாரன்ஸ், மண்ணுக்கடியில் இருக்கும் துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்து, அவர்களை நோக்கி குறிபார்க்க, டீசர் முடிவடைகிறது.

படத்தின் டீசர் வைரலாகி வரும் நிலையில், படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற துவங்கி விட்டது.

Updated On: 12 Dec 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...