/* */

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 10 சிறந்த திரைப்படங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சிறந்த 10 படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.

HIGHLIGHTS

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 10 சிறந்த திரைப்படங்கள்
X

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான ஜெயம் ரவி, தனது நல்ல கதைத் தேர்வால் தனித்து தெரிகிறார். பல தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது சிறந்த 10 படங்கள் என நாங்கள் கருதும் படங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

ஜெயம் | JAYAM

ஜெயம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர். சிறு வயதில் சண்டை போட்டுக் கொள்ளும் கதாநாயகியும் அவனது அப்பாவின் நண்பரின் மகனான வில்லனும் பெரிதாக வளர்ந்துவிட்ட நிலையில், வில்லனுக்கு நாயகி மேல் ஆசை. ஆனால் நாயகி நாயகனைக் காதலிக்கிறாள்.

வில்லனிடமிருந்து நாயகியை எப்படி காப்பாற்றி கரம் பிடிக்கிறான் நாயகன் என்பதே ஜெயம் படத்தின் கதை.

எம். குமரன் S/o மகாலஷ்மி | M.KUMARAN S/o MAHALAKSHMI

ஒற்றைப் பெண்மணியான மகனை வளர்த்து ஆளாக்கும் அம்மாவுக்கு, மகனாக இருக்கும் நாயகன், ஒரு கட்டத்தில் அம்மாவை இழந்து தனது தந்தையைத் தேடி போக வேண்டிய சூழல். அப்போது தந்தை மீது கோபத்தில் இருக்கும் மகன், உண்மையைத் தெரிந்து கொண்டு தந்தையையும் அவரது மனைவி, மகளையும் காப்பாற்றுவதே படத்தின் கதை

உனக்கும் எனக்கும் | UNAKKUM ENAKKUM

கோடீஸ்வரர் வீட்டு பையன் தனது சொந்த காரர் இல்ல திருமணத்துக்கு வரும்போது அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளின் வெகுளித்தனத்தால் காதல் வயப்பட, அடுத்து அவள் ஏழை வீட்டு பெண் என்பது நாயகனுக்கு தெரியவருகிறது. அவளைத் தேடி போகும்போது அவளது அண்ணன் ஒரு சவால் விட, அதனை ஏற்றுக் கொண்டு போட்டியில் ஜெயித்தாரா நாயகியைக் கரம் பிடித்தாரா என்பதுதான் கதை.

சந்தோஷ் சுப்ரமண்யம் | SANTHOSH SUBRAMANYAM

தான் ஆசைப்பட்ட எதையுமே அனுபவிக்க முடியாத மகன், தன் தந்தையின் சொல் கேட்டே வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து கொண்டிருக்க, தனது திருமணம் தன் விருப்பப்படி தனக்கு பிடித்த பெண்ணுடன்தான் நடக்க வேண்டும் என ஆசை படுகிறான். அப்போது நாயகியை சந்திக்க, அவள் மீது காதல் வர, அதே நேரத்தில் அவனுக்கு நிச்சயமும் நடைபெறுகிறது. தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்லும் நாயகன், தன் வீட்டில் தன் காதலியை ஒரு வாரம் தங்க வைக்க, அடுத்தடுத்து நடந்தது என்ன என்பது தான் கதை.

முடிவில் காதலை மட்டுமின்றி நல்ல தந்தையின் அன்பையும், அன்பு என நினைத்து மகனை அடைத்துக் கொண்டிருந்ததையும் வெளிக்கொணர்ந்து படத்தினை நிறைவு செய்திருப்பார்கள்.

பேராண்மை | PERANMAI

ஒடுக்கப்பட்ட மலைவாழ் இளைஞன் ஒருவன் தன் நாட்டைக் காக்க என்னவெல்லாம் செய்கிறான் என்பதும், ஆனால் அவனது செயல்களுக்கான பலனையும் பாராட்டுகளையும் வழக்கம்போல அதிகார வர்க்கமே எடுத்துக் கொள்கிறது. வழக்கம்போல தனது பணியை நாயகன் தொடர்வதாக படம் நிறைவடைகிறது.

அதிகார வர்க்கம், அடிமைத்தனம், காடு அழிப்பு, காட்டில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்டவை குறித்து படம் பேசுகிறது.

நிமிர்ந்து நில் | NIMIRNTHU NIL

நிமிர்ந்து நில் 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படம். இதை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி (இரட்டை வேடம்), அமலா பால், சூரி, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லஞ்சம், ஊழல் எல்லாம் ஒரு பிரச்னையா என்பது போல இயல்பாக மாறி போன சமூகத்தில் நாயகன் இதையெல்லாம் கொஞ்சமும் சகித்துக் கொள்ளாத நேர்மையாளனாக வலம் வருகிறான். மோட்டார் வாகன சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்குவரத்து காவலர்கள் தொடங்கி சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் நீதிபதிகள் வரை நேர்மை மறந்து இருப்பதை அறிந்த அவனுக்கு இவர்களை எல்லாம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என எண்ணம்.

அதற்காக அவன் போடும் திட்டம் என்ன, அவன் யார் யாரை மாட்டிவிட்டான் அதனால் அவனுக்கு என்னென்ன பிரச்னைகள் நேர்ந்தன அதை சமாளித்து வெளிவந்தானா என்பதே படத்தின் கதை.

ரோமியோ ஜூலியட் | ROMEO JULIET

தன்னை பணக்காரன் என நினைத்து பெண் ஒருத்தி காதலித்தை அறியாத இளைஞன் தான் நாயகன். ஆனால் அவன் பணக்காரன் இல்லை என தெரிந்ததும் தூக்கி எறிந்துவிட்டு போகிறாள் நாயகி. இதனால் மனமுடைந்த நாயகன், பழிவாங்க நினைத்து அவளையே தனக்கு ஒரு பெண்ணை காதலிக்க ஏற்பாடு செய்ய சொல்லி கேட்க, அடுத்தடுத்து நடந்த கூத்துக்கள்தான படம்.

பணக்காரனுக்கு வாக்கப்பட்டால் தன் இயல்பை தொலைத்துவிடுவோம் என நாயகி உணரும் நேரம், நாயகன் இன்னொரு பெண்ணுடன் திருமணத்துக்கு தயாராக இருக்கிறான். ஆனால் காதலிக்கு இப்போதுதான் நாயகன் மீது காதல், கடைசி நேரத்தில் கிளைமாக்ஸில் ஒரு டிவிஸ்டுடன் படம் நிறைவடைகிறது.

தனி ஒருவன் | THANI ORUVAN

தனக்கு நிகரான எதிரியைத் தேர்ந்தெடுத்து பழிவாங்க நினைக்கு போலீஸ் நாயகன். அவனைக் கண்டுபிடிக்க நாயகன் சேகரிக்கும் தகவல்கள், ஆர்கனைஸ்டு கிரைம் என படம் முழுக்க மிகப் பெரிய விசயத்தை பேசியிருப்பார்கள்.

சின்ன சின்ன கிரைம்களுக்கு பின் மிகப் பெரிய கிரைம் ஒன்று ஒளிந்திருக்கும். அதை செய்பவன் சமூகத்தில் மிகப் பெரிய இடத்தில் இருப்பான். அவன்தான் தன் எதிரி என தேர்ந்தெடுத்து அவனை எதிர்த்து நிற்கிறான் நாயகன். கடைசியில் ஜெயித்தானா எதிரி என்ன ஆனான் என்பதே கதை.

மிருதன் | MIRUTHAN

ஸோம்பி கதைகள் ஹாலிவுட்டுக்கு புதியது இல்லை என்றாலும் தமிழில் இது புது முயற்சியாகும்.

டிராபிக் போலீஸாக இருக்கும் நாயகனுக்கு மருத்துவர் ஒருவர் மீது காதல். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னது கிடையாது. ஆனால் அந்த மருத்துவருக்கு இன்னொரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஊரில் கொடூர வைரஸால் அனைவரும் ஸோம்பியாக மாறி வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தப்பிக்கிறார்கள்.

ஸோம்பிகளிடமிருந்து தப்பிக்க இவர்கள் படும் பாடு, கடைசியில் நாயகனே ஸோம்பியாக மாற கிளைமேக்ஸில்தான் நாயகிக்கு தன்னை இவன் காதலிக்கிறான் என்பதே தெரியவரும். படம் மிகவும் வித்தியாசமான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.

அடங்கமறு | ADANGAMARU

அதிகார வர்க்கத்தின் மீதும் அவர்களுக்கு சலுகை காட்டும் நிர்வாகம் மீதும் கடுப்பில் இருக்கும் காவலராக சுபாஷ் ஒரு பிரச்னையில் பெரிய இடத்து இளைஞர்களை பகைத்துக் கொள்கிறார். இதனால் அவரது குடும்பத்தை இழக்க நேர்கிறது.

அதற்கு காரணம் யார் என்பது தெரிந்தும் தான் காவலராக இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல், பின் பணியைத் துறந்து அதிகார வர்க்கத்து இளைஞர்கள் ஒவ்வொருவராக பழி வாங்குகிறார். அனைவரையுமே தங்கள் தந்தையாலேயே கொலை செய்ய செய்து பழிவாங்குகிறார்.

அப்பா பெயரை பயன்படுத்தி இவர்கள் செய்த குற்றங்களுக்கு அப்பாவாலேயே கொல்லப்படுகிறார்கள் என்பது போல இயக்குநர் கதை அமைத்திருக்கிறார்.

Updated On: 10 Sep 2023 6:02 AM GMT

Related News