/* */

ஜெயிலர் வில்லன் இத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரா?

ஜெயிலர் வில்லன் விநாயகன் நடித்துள்ள தமிழ் படங்கள் எவை எவை தெரியுமா?

HIGHLIGHTS

ஜெயிலர் வில்லன் இத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரா?
X

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்துள்ள விநாயகனை தமிழ் சினிமாவில் பார்த்த நினைவு இருக்கிறதா? திமிரு படத்தில் வருவாரே அவர்தானே என்று நீங்கள் நினைப்பது சரிதான். அவர்தான் திமிரு படத்தில் நடித்திருப்பார். ஆனால் அதுமட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் விநாயகன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இயக்கியுள்ள படம். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மாஸாக என்ட்ரி கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும். படம் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருக்கும் இந்த படத்தில் மாஸ் சீன் இருப்பதால் மலையாளம், கன்னட மொழி சினிமா ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடுகின்றனர்.

இந்த படத்தில் தனது மிரட்டல் நடிப்பால் ரஜினிகாந்த் முன் நடித்து அசத்தியிருப்பார் விநாயகன். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் நல்ல டான்சராகவும் இருக்கிறார். பிளாக் மெர்க்குரி எனும் பெயரில் ஒரு நடனக் குழுவையும் நடத்தி வருகிறார். பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடன அமைப்பாளராகவும் இவர் பெயர் பெற்றிருக்கிறார்.

தமிழில் நடிகராக அறிமுகம் ஆகும் முன் மலையாளத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 1995ம் ஆண்டு வெளியான மாந்திரிகம் படத்தில் சரியான வேடம் அது. பின்னர் நகைச்சுவை நடிகராகவும் சினிமா வாழ்க்கையைத் தொடர்ந்தார். திடீரென அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் நடனக்குழுவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தமிழில் திமிரு, சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான் உள்ளிட்ட படங்களிலும் பிரமாதமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமா வில்லன்கள் பட்டியலில் முன்னணி இடத்துக்கு வந்திருக்கிறார் விநாயகன். அடுத்தடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வருகின்றனராம். விரைவில் பல படங்களில் அவரை வில்லனாக காணலாம் என்கிறார்கள்.

Updated On: 14 Aug 2023 7:49 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை