/* */

ஜெயிலர் படத்துக்கு ஃப்ரீ டிக்கெட்! ஒரு நாள் விடுமுறை... மாஸ் காட்டும் மதுரை!

மதுரையைச் சேர்ந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஜெயிலர் பட டிக்கெட்டை இலவசமாக கொடுத்து ரிலீஸ் தேதியில் விடுமுறையும் வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயிலர் படத்துக்கு ஃப்ரீ டிக்கெட்! ஒரு நாள் விடுமுறை... மாஸ் காட்டும் மதுரை!
X

மதுரையில் ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்டையும் கொடுத்து ஒரு நாள் விடுமுறையும் அறிவித்து ஜெயிலர் படத்துக்கு அதன் ஊழியர்களை அழைத்துச் செல்கிறது.

மதுரையில் செயல்பட்டு வரும் பிரபல Uno Aqua Care நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது. ஜெயிலர் வெளியாகும் தினத்தில் விடுமுறையுடன் அந்த படத்துக்கான டிக்கெட்டையும் இலவசமாக கொடுத்திருக்கிறது. மேலும் அந்த நிறுவனமே திரையரங்குக்கு தன் ஊழியர்களை அழைத்துச் செல்கிறது.



நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தின் காவாலா பாடலில் தமன்னா ஆடிய ஆட்டம் மொத்த தமிழ்நாட்டையும் ஆட்டியதோடு இந்திய அளவில் டிரெண்டிங்காக இருக்கிறது. உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த பாடல் படு டிரெண்டிங்காக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வெளியான சில பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரின் ரஜினிகாந்த் சாதுவாக பூனைமாதிரியும், ஆக்ரோஷமாக புலியாகவும் பாய்ந்து அடிக்கும் காட்சிகளும் அமைந்திருந்தன. இதனால் ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On: 5 Aug 2023 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்