/* */

Jailer First Single எப்ப ரிலீஸ் ஆகுது தெரியுமா?

ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அறிவிப்பு சூப்பரான புரோமோவுடன் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

HIGHLIGHTS

Jailer First Single எப்ப ரிலீஸ் ஆகுது தெரியுமா?
X

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஷிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நடந்து முடிந்து கடந்த வாரம் நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. | jailer movie cast


சமீபகாலங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படம்தான் மிகப் பெரிய அளவில் வசூலிலும், விமர்சனத்திலும் வரவேற்பை பெற்ற படமாகும். அதன் பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களாக மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார் ரஜினிகாந்த். | rajinikanth upcoming movies

இடையில் காலா, 2.0, பேட்ட படங்கள் ஓரளவுக்கு வசூலைத் தந்தாலும் அது ரஜினிகாந்தின் மாஸ் நிலவரத்துக்கு ஈடாக அமையவில்லை. இதனால் ஜெயிலர் படத்தை மிகவும் நம்பியிருக்கிறார் ரஜினிகாந்த். முத்துவேல் பாண்டியனாக தனது டப்பிங் பணிகளை விரைவில் துவங்கவுள்ளார் அவர். | rajinikanth top 10 movies


மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து ஷிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெரோப் என பான் இந்திய நட்சத்திரங்களை கொண்டு மிகப் பெரிய திட்டத்தைப் போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். | jailer mohanlal salary

ஆக்ஷன் திரில்லர் படமாகவும், சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த கதையாகவும் உள்ள இந்த படத்தில் ஜெயிலராக நடிக்கிறார் ரஜினிகாந்த். ஜெயிலிலிருந்து தப்பிச் செல்ல நினைக்கும் கைதிகளை ரஜினிகாந்த் எப்படி தடுக்கிறார் என்பதுதான் கதையாம். | jailer movie story


ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இந்த படம், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக முதல் பாடல் முந்திக்கொள்ளும் என்கிறார்கள். | jailer movie release date

ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்திலேயே வெளியாகும் எனவும், பாடல் வெளியாகும் தேதியைக் குறிக்கும் வகையில் முன்னதாக புரோமோ வீடியோவும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக அனிருத்தும் நெல்சனும் சேர்ந்தாலே மஜா புரோமோ வெளியிடுவார்கள். இப்போது கேட்கவா வேண்டும் ரஜினிகாந்த் படத்துக்கு எப்படிபட்ட வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். | jailer first single release date

Updated On: 7 Jun 2023 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!