/* */

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து விட்டாரா அசல் கோளார்?

Asal Kolaar Re Entry Bigg Boss Tamil -பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் கோளாறு மீண்டும் வந்து விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து விட்டாரா அசல் கோளார்?
X

அசல் கோளாறு

Asal Kolaar Re Entry Bigg Boss Tamil -விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் தமிழ் 6 சீசன் தொடக்க நாளான அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக வந்த 21 பேர்களையும் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த 21 பேரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள், பாடகர்கள் என பன்முகத் திறமை கொண்ட பலரும் உள்ளனர்.

asal kolaar reentry bigg boss tamil, asal kolaar bigg boss tamilபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியுபர் ஜி. பி. முத்து தனது மகனுக்கு உடல் நலமில்லை எனக்கூறி அதனால் தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கமல்ஹாசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டார்.பிள்ளை பாசம் காரணமாக தவித்த அவரை வெளியே செல்லலாம் செல்வதற்கு கமல்ஹாசன் அனுமதி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நடிகை சாந்தி, அசல் கோளாறு, இறுதியாக மகேஸ்வரி என பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு மாத காலத்தில் 5 பேர் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதம் 16 பேர் உள்ளே இருக்கிறார்கள்.

asal kolaar reentry bigg boss tamil, asal kolaar bigg boss tamilபிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பொறுத்தவரை ஜி.பி. முத்து மட்டுமே தானாக தனது மகனின் உடல் நிலையை சுட்டிக்காட்டி வெளியேறினார். மற்றவர்கள் பிக் பாஸால் வெளியேற்றப்பட்டார்கள் என்பதே குறிப்பிடத்தக்கது. வெளியேற்றப்பட்டவர்களின் செயல்பாடு, ரசிகர்கள் அவர்களுக்கு வழங்கிய மதிப்பெண்கள் இவற்றின் அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அசல் கோளாறு ஆரம்பத்தில் இருந்தே கோளாறான ஒரு நபராக, மன்மத குஞ்சாக பிக் பாஸ் வீட்டிற்குள் நடமாடிக் கொண்டிருந்ததால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு அதிருப்தி ஏற்பட்டது .அதனால் அவருக்கு எதிராக ரசிகர்கள் மதிப்பெண் கொடுத்தார்கள். அதன் காரணமாக அவர் வெளியேறும்போது கமல்ஹாசன் வெளியில் போய் கேட்டு பாருங்கள் எதற்காக வெளியேற்றப்பட்டீர்கள் என்பது தெரியும் என முத்திரை குத்தி அனுப்பினார்.

asal kolaar reentry bigg boss tamil, asal kolaar bigg boss tamilபிக் பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள சக போட்டியாளர்களான பெண்களிடம் தவறாக பேசியது. தேவையில்லாத இடங்களில் தொட்டு பழகியது உள்ளிட்ட சில செயல்கள் அவருக்கு எதிராக திரும்பின. அதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கூட ஒரு முறை ஜி.பி. முத்து ஏன் தம்பி உங்களுக்கு ஆண்களை பிடிக்காதா பெண்கள் மட்டும் தான் பிடிக்குமா என அறிவுரை கூறுவது போல் திட்டினார்.

asal kolaar reentry bigg boss tamil, asal kolaar bigg boss tamilபிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் மீதமுள்ள 16 பேரில் நூறாவது நாள் வரை யார் நீடிக்கப் போறார் போகிறார்களோ அவர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் இந்த பரபரப்பான சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அசல் கோளாறு இருப்பதாகவும் அவர் மீண்டும் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Nov 2022 10:11 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...