/* */

இந்தி திரையுலகில் கால்பதிக்கிறாரா சூர்யா?

இந்தி படம் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக, சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

HIGHLIGHTS

இந்தி திரையுலகில் கால்பதிக்கிறாரா சூர்யா?
X

நடிகர் சூர்யா

'சூரரைப்போற்று' படத்துக்கு தேசிய விருது பெற்ற உற்சாகத்தில் இருக்கிறார் சூர்யா. இந்த படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தி படத்திலும் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். இதுதவிர நேரடியாக இந்தி படம் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை இந்தி டைரக்டர் பரூக் கபீர் இயக்க இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் திடீரென்று மும்பை சென்றுள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது. புதிய இந்தி படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட சூர்யா மும்பை சென்று இருப்பதாக பேசப்படுகிறது. இதனை சூர்யா தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சூர்யா தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடிக்கிறார். அடுத்து, வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, ஞானசேகர் ஆகியோர், சூர்யா படங்களை அடுத்தடுத்து இயக்கும் டைரக்டர்கள் பட்டியலில் உள்ளனர்.

எனினும் இந்தி திரையுலகில் சூர்யா கால்பதிப்பாரா, என்பது வரும் நாட்களில் உறுதியாக தெரிந்து விடும்.

Updated On: 11 Aug 2022 3:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்