/* */

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் பட இந்திய படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

HIGHLIGHTS

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் பட இந்திய படப்பிடிப்பு நிறைவு
X

Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் "ரத்தம்" படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது.

முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு "ரத்தம்" திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.

Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, 'கொலை' மற்றும் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் 2022-ல் வெளியாகவுள்ளது.

Updated On: 7 April 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?