குதிரை சவாரி செய்யும் நடிகை காஜல் அகர்வால்

indian 2 movie update -‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நடிகை காஜல் அகர்வால், குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குதிரை சவாரி செய்யும் நடிகை காஜல் அகர்வால்
X

indian 2 movie update - குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட நடிகை காஜல் அகர்வால்.

indian 2 movie update, indian 2 movie heroine, kajal aggarwal learns horse riding for indian 2- தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ராம்சரண், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் காஜல் அகர்வால்.


இதனைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு, தொழிலதிபர் கெளதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். இதன் பின், கடந்த ஏப்ரல் மாதத்தில், காஜல் - கெளதம் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் தங்களின் குழந்தைக்கு 'நெய்ல்' என அவர்கள் பெயரிட்டனர். தங்களின் திருமணம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு, அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும், தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்து வந்தார்.


இதற்கு மத்தியில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் ௨' படத்திலும் நடிக்க, காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் 'இந்தியன் ௨' படத்தில், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக.அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது.

இந்நிலையில், 'இந்தியன் ௨' படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொள்வது தொடர்பான வீடியோ ஒன்றை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.


மேலும், இந்த பதிவின் கேப்ஷனில், பிரசவத்திற்கு பின், நான்கு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, தற்போது படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவதைப் போன்று உணர்கிறேன். என் உடல் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. குழந்தை பிறப்புக்கு முன்பு, என்னால் நீண்ட நேரம் உடலுழைப்பை செலுத்த முடிந்தது. குழந்தைப் பிறப்புக்கு பிறகு அதே ஆற்றலுடன் பணிபுரிவது கடினமானது. தனியாக குதிரை ஓட்டுவது பெரிய சவாலாக உள்ளது.

தற்காப்புக் கலை பயிற்சியை, ஆரம்பம் முதலே எடுத்து வந்தது தற்போது உதவுகிறது. நமது உடல் மாறலாம். ஆனால் தடுக்க முடியாத உறுதித்தன்மையும் இலக்கும் மாற வேண்டியதில்லை. நாம் நாள்தோறும் நம்மை நிரூபிப்பதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்தது தான் அது. எந்த முடிவாக இருந்தாலும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை.


'இந்தியன் ௨' படத்தில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. இந்த வேலையில் புதிதாக திறன்களை கற்றுக் கொண்ட எனக்கு, பின்னாளில் அது பொழுது போக்காகவும் மாறியது. சினிமாத்துறையில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இதனை என்னுடைய வீடு என்றுதான் அழைக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 22 Sep 2022 12:59 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
 2. டாக்டர் சார்
  Rantac syrup uses in tamil-ராண்டக் சிரப் என்ன பாதிப்பிற்கு
 3. மதுரை மாநகர்
  கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
 4. சினிமா
  சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
 5. தொழில்நுட்பம்
  Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
 6. டாக்டர் சார்
  Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
 7. லைஃப்ஸ்டைல்
  painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
 8. சினிமா
  வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
 9. ஈரோடு
  ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
 10. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்