/* */

15 ஆண்டுகளில், நடிகை அஞ்சலி சேர்த்த சொத்து 'இவ்ளோ'தான்!

இத்தனை ஆண்டுகள் நடித்தும், நடிகை அஞ்சலியின் சொத்து வெறும் ரூ.10 கோடி தான், என்ற ஆச்சரியமான தகவல், வேகமாக பரவி வருகிறது.

HIGHLIGHTS

15 ஆண்டுகளில், நடிகை அஞ்சலி சேர்த்த சொத்து இவ்ளோதான்!
X

நடிகை அஞ்சலி

தமிழில் 2007-ல் 'கற்றது தமிழ்' படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு, உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க, கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். ஆனாலும் எதிர்பார்த்த படங்கள் இல்லை.


இந்நிலையில் அஞ்சலியின் சொத்து குறித்து, தெலுங்கு இணைய தளங்களில் ஆச்சரியமான தகவல் பரவி வருகிறது. 15 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் அஞ்சலி, நிறைய சொத்து சேர்த்து இருப்பார் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள்.


ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து அவர் சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்தின் மதிப்பு ரூ.10 கோடிதான் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை சம்பளம் வாங்கும் அஞ்சலியால், இத்தனை காலம் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்ததா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


ஏற்கனவே சொத்து பிரச்சினையில், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அஞ்சலி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Aug 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?