h vinoth talks about manju warrier-நான் அதிகமா பயந்தது மஞ்சுவாரியருக்குத்தான்: இயக்குனர் வினோத்

h vinoth talks about manju warrier-ரசிகர்கள் விழாவில் நான் அதிகமா பயந்தது மஞ்சுவாரியருக்குத்தான் என இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
h vinoth talks about manju warrier-நான் அதிகமா பயந்தது மஞ்சுவாரியருக்குத்தான்: இயக்குனர் வினோத்
X

இயக்குனர் எச்.வினோத், சதுரங்கவேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் எச்.வினோத் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார்.

பச்சக் குதிரை மற்றும் கோலி சோடா ஆகிய படங்களில் முறையே ஆர்.பார்த்தீபன் மற்றும் விஜய் மில்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் .

2014 ஆம் ஆண்டு அவரது இயக்குனராக அறிமுகமான சதுரங்க வேட்டை , விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேர்கொண்ட பார்வை 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து வலிமை 2022ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இந்த படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

சமீபத்தில் எச்.வினோத் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஆபிஸிலும் தற்போது வெற்றிநடை போடுகிறது.

வங்கி கொள்ளை மற்றும் பங்குச்சந்தைகள் பற்றிய 'துணிவு' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல சமூகவலைத்தள சேனலின் எச்.வினோத் ரசிகர்கள் விழாவில் இயக்குனர் வினோத் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் பல விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. நிகழ்ச்சியில், பஸ் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களைப் அவர் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, மஞ்சுவாரியர் வீடியோ காலில் வந்து, துணிவு படத்தில் என்னை கண்மணியாக பார்த்ததற்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் இயக்குனர் வினோத்திடம் தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கண்மணி கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்களிடமிருந்து நிறைய அன்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் எனக்கும் ரசிகர்களின் அன்பு கிடைத்து வருகிறது. இதற்கு எச்.வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றி என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் வினோத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பரிசு அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய எச்.வினோத், நான் அதிகமாக பயந்தது மஞ்சு வாரியருக்குத்தான். அவர் மிகவும் சென்சிட்டிவ் நடிகர் என பெயர் எடுத்துவிட்டார்கள். அதனால் அவருக்கு படத்தில் எங்குமே அவருக்கு ஆக்டிங் சென்சிட்டிவ் ஸ்கோப் மிகவும் குறைவாக இருந்தது.

இந்த படம் கேரளாவில் ரீலீசாகவுள்ளது. அங்கிருப்பவர்கள் எல்லாம் டென்ஷன் ஆகிவிடுவாங்களோ என்ற பயம் இருந்தது. மஞ்சுவாரியர் படம் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷமாக எனக்கு போனில் அழைத்தார்கள். அனைவரும் ''ஆக்‌ஷன் ஹீரோயினி.. ஆக்‌ஷன் ஹீரோயினி'' என்று கத்துகிறார்கள். பயங்கர சந்தோஷமாக உள்ளது. அடுத்தடுத்து பெரிய பெரிய ஆக்‌ஷன் படம் எடுக்கும்போது என்னை அழையுங்கள் என கூறியதாக எச்.வினோத் தெரிவித்தார்.

Updated On: 2023-01-24T15:24:01+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...