/* */

விளையாட்டு ஆசிரியராக புதிய படத்தில் நடிக்கும் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி

Hiphop Tamizha Aathi's PT Sir Movie Update- விளையாட்டு ஆசிரியர் கேரக்டரில், 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

விளையாட்டு ஆசிரியராக புதிய படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி
X

Hiphop Tamizha Aathi's PT Sir Movie Update- நடிகர் ‘ஹிப்ஆப் தமிழா’ ஆதி. ‘பிடி மாஸ்டர்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியீடு.

Hiphop Tamizha Aathi's PT Sir Movie Update- 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

'இன்டிபென்டன்ட்' இசை மரபை தமிழில் மீண்டும் புதிய வடிவத்தில் தொடங்கி வைத்த 'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் பல முக்கிய பாடல்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தொடர்ந்து ஆதியின் குறிப்பிட்ட சில பாடல்களை மட்டுமே ஆன் ரிப்பீட் மோடில் போட்டு கேட்கும் தீவிர ரசிகர்களும் அவரது பாடல்களுக்கு உண்டு.


தொடர்ந்து தமிழில் 'ஆம்பள', 'இன்று நேற்று நாளை', 'தனி ஒருவன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஆதி, 2017ம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் 'மீசைய முறுக்கு' என்னும் படத்தை இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்திருந்தார்.

அதுவரை ஆல்பம் பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி, இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். ஆதி அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார். "டக்கரு டக்கரு" பாடலை அவரே பாடி, இயக்கினார். ஆதி திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான 'ஆம்பள' தக்ஷபடத்தின் வெற்றி விழாவில் 'ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ' என்று சுந்தர்.சி கூறினார்.


அதன் பின் ஆதியை நடிக்குமாறு கூறி வந்த இயக்குநர் சுந்தர்.சி 'டக்கரு டக்கரு' பாடல் வீடியோவை பார்த்துவிட்டு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியிடம், 'நீங்கள் நிச்சயம் நடிக்க வேண்டும்,' என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே பாடல் வீடியோக்களை நடித்து இயக்கி வந்த ஆதி, தன்னிடம் இருந்த கதையை இயக்குநர் சுந்தர்.சி-யிடம் கூற அவருக்கும் கதை பிடித்துப் போய் உடனே ஆரம்பிக்கப்பட்டது 'மீசைய முறுக்கு' திரைப்படம்.

அவ்னி மூவீஸ் சார்பில் 40 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கிறார் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி. இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமெடி, கருத்து, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கல்லூரிக் கதையாக இருந்தது. 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருந்தது.

இதனை அடுத்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள ஆதி, 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார்.

'ஹிப்ஹாப் தமிழா' ஆதி, தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆதியின் 7வது படமாக உருவாகும் இந்த படத்தை 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.

விளையாட்டு கதைக்களம் கொண்ட இப்படத்தில், 'கனகவேல்' என்ற கதாபாத்திரத்தில் பி.டி ஆசிரியராக ஆதி நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மாதேஷ் மாணிக்கம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் காஷ்மீரா கதாநாயகியாகவும், இயக்குனர் பாண்டியராஜன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் 'ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்' வெளியிட்டுள்ளது. 'பி.டி. சார்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் 'ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 March 2024 9:38 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு