/* */

சாய்பல்லவிக்கு இவ்வளவு நீளமான முடி எப்படி? அவரே சொன்ன டிப்ஸ்!

Sai Pallavi Hair Care-காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடையாமல் தடுக்கவும் முனை வெடிக்காமல் இருக்கவும் இது மிகவும் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

Sai Pallavi Hair Care
X

Sai Pallavi Hair Care

Sai Pallavi Hair Care-தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி, ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாகவே மக்களுக்கு அறிமுகம் ஆனார். மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலம் மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அதன்பிறகு தெலுங்கில் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் சாய் பல்லவி. தற்போது தமிழிலும் கூடுதல் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

மாரி படத்தில் வரும் ரௌடி பேபி பாடல் மூலம் உலகம் முழுக்க சென்று சேர்ந்தது இவரது நடனம். அந்த அளவுக்கு பிரமாதமாக ஆடும் சாய்பல்லவிக்கு பெரிய ப்ளஸ் அவரது நீளமான கூந்தல்தான். அவரை நேசிக்கும் பலருக்கும் அவரிடம் பிடித்தது அவரது நீண்ட அழகிய வளமான முடிகள்தான் என்று கூறுகிறார்கள்.

முகத்தில் பருக்கள் இருந்தாலுமே மேக்கப் துளியும் இல்லாமல் செயற்கையான பொருட்களைப் பயன்படுத்தாமல் படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தனது இயற்கையான அழகை இயற்கையுடன் இணைந்தே பேணி பாதுகாத்து வருகிறார்.

இவ்வளவு அழகான கூந்தல் அவருக்கு இருப்பதற்கு காரணமே அவர் செயற்கையான பொருட்கள் எதையும் பயன்படுத்துவது இல்லையாம். சருமத்தை பராமரிக்கவும் கூந்தலை பேணவும் அவர் உணவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்று கூறுகிறார். காய்கறிகள், பழங்களை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்கிறார் சாய் பல்லவி.

ஆரோக்யமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்று கூறுகிறார் அவர். தனது கூந்தலை பராமரிக்க சாய்பல்லவி கற்றாழையைப் பயன்படுத்துகிறார்.

கற்றாழையை நன்கு கழுவி அதன் ஜெல்லை எடுத்து கூந்தலுக்கு மாஸ்க் போடலாம். தொடர்ந்து கற்றாழையைப் பயன்படுத்தி வரும்போது கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன.

காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடையாமல் தடுக்கவும் முனை வெடிக்காமல் இருக்கவும் கற்றாழை ஜெல் மிகவும் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 April 2024 8:38 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!