/* */

HBD GV PRAKASH இந்த தலைமுறையின் இளையராஜா ஜிவி பிரகாஷ்குமார்!

GV Prakash Birthday-இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

HIGHLIGHTS

HBD GV PRAKASH இந்த தலைமுறையின் இளையராஜா ஜிவி பிரகாஷ்குமார்!
X

GV Prakash Birthday-இசையமைப்பாளர், பாடகர், நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரின் 37வது பிறந்தநாள் இன்று. அவரை இந்தகால தலைமுறையின் இளையராஜா என்று கூறினால் கொஞ்சம் மிகையாக இருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உண்மையில் இது இளையராஜாவை ஜிவிபிரகாஷுடன் ஒப்பிடும் பதிவில்லை.

திரையிசை பாரம்பரியத்தின் இளம் சாதனையாளரான ஜிவி பிரகாஷ், நடிப்பில் கொஞ்சம் கத்துக்குட்டியாக இருந்தாலும், பிறந்து தரையில் இறங்கிய நாளிலிருந்து இசையை நுகர்ந்தே வாழ்ந்து வருகிறவர்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான ஜி வி பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர். ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார் ரஹ்மான். அதன் பிறகு 90களில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் அத்தனை படங்களிலும் சிறுவர்களுக்கான குரலுக்கு ஜிவி பிரகாஷைத் தான் பயன்படுத்தியிருப்பார்.

சிறுவயதிலேயே மாமாவின் இசையில் பாடம் கற்ற ஜிவி பிரகாஷ் பின் தனது திரை இசைப்பயணத்தின் தனியாக பயணிக்கத் தொடங்கியது வசந்தபாலனின் வெயில் படம் மூலம் தான்.

ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் தான் இயக்கும் முதல் படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமாரை இசையமைக்க வைத்து அறிமுகம் செய்தார்.

அதுவரை தமிழ் சினிமா பெரிய அளவில் பதிவு செய்யாத விருதுநகரின் வெப்பமும் கசகசப்பும் அங்கு வாழும் அப்பாவி மக்களின் அன்பையும் பாசத்தையும் கண்முன் நிறுத்தினார் வசந்தபாலன். அதற்கு மிகப்பெரிய துணையாக இசை மூலம் கொடுத்தார் ஜி வி பிரகாஷ்.

வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே, காதல் நெருப்பின் பயணம் ஆகிய முற்றிலும் வேறு வேறு வகையான 3 பாடல்களை அழுத்தமாக பதிவு செய்து அனைவரையும் ரசிக்க வைத்தார். படத்தில் பின்னணி இசைக்காகவும் கவனிக்க வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன் என இரண்டு வேறுபட்ட கதைகளுக்கு பாடல்கள் கொடுத்து பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டார். அஜித் நடிப்பில் கிரீடம் படத்தில் அக்கம் பக்கம், விழியில் உன் விழியில், கனவெல்லாம் நடக்குதே, கண்ணீர் துளியே என பாடல்களை கொடுத்து தமிழர்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளராக மாறினார்.

இந்த பக்கம் தனுஷுக்கு பொல்லாதவன் படத்தில் மின்னல்கள் கூத்தாடும், படிச்சு பாத்தேன், எங்கேயும் எப்போதும், நீயே சொல் என அருமையான பாடல்களைக் கொடுத்தார். பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்தி வெற்றிப்படமாக்கினார். வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் மாறினார். பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்களுக்கும் அவர்தான் இசை.

இதேபோல ஏ எல் விஜய்யுடன், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், சைவம் என தொடர்ந்து படங்களில் பணிபுரிந்து அந்த படங்களின் வெற்றிக்கு காரணமாக தன் இசையைப் பேசவைத்தார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி வி பிரகாஷின் இசை உலகத் தரம் வாய்ந்தது. மயக்கம் என்ன படத்தில் அத்தனை பாடல்களும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டது.

அட்லியுடன் ராஜா ராணி, தெறி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களுக்கு ஜிவி பிரகாஷின் இசைதான் காரணம் என்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாது. அந்த அளவுக்கு கதையை எலிவேட் செய்ய ஜிவி பிரகாஷின் இசை காரணமாக அமைந்தது.

இத்தனை படங்களுக்கு பாடல்கள் கொடுத்து, பின்னணி இசை அமைத்து கொடுத்தது மட்டுமின்றி, அவரே பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ஆடுகளம் படத்தில் யாத்தே யாத்தே, தலைவா படத்தில் யாரிந்த சாலையோரம், மதயானைக் கூட்டத்தில் கோனக் கொண்டக்காரி, சுந்தரபாண்டியன் படத்தில் ரெக்கை முளைத்தே, மெர்சல் படத்தில் மெர்சல் அரசன் என தொடர்ந்து பல பாடல்களைப் பாடி அவையும் வெற்றியடைந்தன.

இசையில் தனது நீண்ட கால பயணத்துக்கு அச்சாரம் போட்ட பிறகு தன் நடிப்பு ஆசைக்கும் அரிதாரம் போட்டார் ஜிவி பிரகாஷ். அவரின் முதல் படமாக டார்லிங் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. பாலாவின் நாச்சியார், ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம், சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை, வசந்தபாலனின் ஜெயில் என இவரது நடிப்புக்கு தீனி போட்ட படங்கள் ஏராளம்.

அசுரன் படத்திலும், சூரரைப் போற்று படத்திலும் இவரின் பின்னணி இசை, படத்தை வேறொரு உயரத்துக்கு எடுத்துச் சென்றது. வழக்கமாக இளையராஜாவின் இசைக்கே இந்த பெருமை கிடைக்கும். அதன் பிறகு ஏ ஆர் ரஹ்மான். இப்போது ஜி வி பிரகாஷ் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார்.

ஜி வி பிரகாஷின் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்க வேண்டாம் இசை பணியைக் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசையும் நடிப்பும் ஒருசேர கவனித்து கலையுலகின் நீண்ட நெடிய நாட்கள் நீடூழி வாழ அனைவரது சார்பிலும் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வோம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 5:49 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  5. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  9. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  10. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்