/* */

GP Muthu With Ajith அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்: அஜித் படத்தில் ஜிபி முத்து

AK62 Comedian GP Muthu -பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஜிபி முத்துவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

GP Muthu With Ajith அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்: அஜித் படத்தில் ஜிபி முத்து
X

AK62 Comedian GP Muthu -தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரைக்கும் தான் படித்து இருக்கிறார். இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான டிரெஸ் கிடையாது சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்துங்க, பெல் பட்டனை அழுத்துங்க என்று சொல்வது கிடையாது. அதையும் தாண்டி இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது

டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து, முதல் போட்டியாளராக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.

மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அவரை வெளியே செல்ல அனுமதித்தார்.

இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்துவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், ஜிபி முத்துவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அவரை அஜித் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்துவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படத்தில் ஜிபி முத்துவை நடிக்க வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தெரிந்த காரணத்தால், அவரை வீட்டில் இருந்து வெளியேற வைத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Nov 2022 9:59 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...