/* */

கௌதம் கார்த்திக், மஞ்சிமாவின் ஹனிமூன் எங்கே? வெளியான தகவல் வைரல்

gautham karthik marriage - சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமாவின் ஹனிமூன் எங்கே செல்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

கௌதம் கார்த்திக், மஞ்சிமாவின் ஹனிமூன் எங்கே? வெளியான தகவல் வைரல்
X

நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக்.

gautham karthik marriage - சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமாவின் ஹனிமூன் எங்கே செல்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 28 அன்று நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவருமே தங்கள் காதலை மறைமுகமாகவே வைத்திருந்தனர். அதேபோலவே, அவர்களின் திருமணமும் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சினியுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

கடந்த 2019ல் தேவராட்டம் படப்பிடிப்பின் போது கௌதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் ஒருவரையொருவர் அறிமுகமாகினர். அதன்பின் அவர்கள் இருவருக்குமிடையே வலுவான நட்பை வளர்த்துக் கொண்டனர்.

இந்த நட்பு குறித்து மஞ்சிமா கூறுகையில், கௌதமும் நானும் ஒரு வருடம் நண்பர்களாக இருந்தோம். எனது கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் படுக்கையில் இருந்தபோது, அவர் தான் எனக்கு பக்க பலமாக இருந்து வந்தார். நான் சென்னையில் தனியாக வசித்து வந்தது என் வாழ்க்கையின் கடினமான கட்டங்களில் ஒன்றாகும். கவுதமும் இன்னும் சில நண்பர்களும் தான் தினமும் மாலையில் வீட்டுக்கு வந்து எனக்கு சமைத்து என்னை கூட்டிக்கொண்டு போவார்கள் என சோகத்துடன் அவர் வெளிப்படுத்தினார்.

கௌதமுக்கும் எனக்கும் காதல் என்பது மிகவும் முக்கியமானது; பரஸ்பர மரியாதையானது. அவர் எனது சிறந்த நண்பர், நான் எதற்கும் முதலில் செல்வது அவரைத்தான். இது எங்கள் உறவுக்கு ஒரு முக்கியமான அடித்தளம் என்று நான் நினைக்கிறேன்.

எங்கள் மனதில் திருமணம் என்ற எண்ணமே இல்லை, ஆனால் நாங்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்வோம் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று வருடங்களாக டேட்டிங் செய்து வருகிறோம். இருந்தாலும், எங்கள் குடும்பத்தினர் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, தங்கள் திருமணத்தை மற்ற பிரபல திருமணங்களைப் போலவே ஒரு மில்லியன் விருந்தினர்களை அழைக்காமல், எங்கள் வாழ்க்கையிலும் திரைப்படப் பயணத்திலும் ஒரு அங்கமாக இருந்தவர்களை மட்டுமே நாங்கள் அழைத்து எங்கள் திருமணத்தில் வாழ்த்துக்களை பெற்றோம். அது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது என்றார் மஞ்சிமா.

gautham karthik latest news

திருமணம் முடிந்த நிலையில் மஞ்சிமா ஒரு பேட்டியில், அவரிடம் ஹனிமூன் எங்கே என கேட்கப்பட்டதற்கு அவர், கௌதம் நடித்துவரும் பத்துதல பட வேலைகள் எல்லாம் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஹனிமூன் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனிடையே இவர்களது திருமண வாழ்வுக்கு திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 1 Dec 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...