/* */

'ரிலீஸ்' அன்றே ரூ. 2 கோடி வசூலித்த 'கட்டா குஸ்தி'

"Gatta Kusthi Box Office Collection"- நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம், ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது.

HIGHLIGHTS

ரிலீஸ் அன்றே  ரூ. 2 கோடி வசூலித்த கட்டா குஸ்தி
X

"Gatta Kusthi Box Office Collection"- முதல் நாள் வசூலிலேயே ரூ. 2 கோடியை தொட்ட ‘கட்டாகுஸ்தி’.

"Gatta Kusthi Box Office Collection, vishnu vishal Gatta Kusthi movie Collection"- நடிகர் விஷ்ணு விஷால், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் முக்கியமான நடிகர். இவர் பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். குறிப்பாக, கிராமத்து வாலிபராக, பண்ணையில் வேலை செய்யும் கூலிக்காரனாக நடித்த, வெண்ணிலா கபடிக்குழு, பலராலும் கவனிக்கப்பட்ட படம். அதிலும், கபடி வீரராக, திறம்பட நடித்திருப்பார்.

'குள்ளநரிக்கூட்டம்' படத்தில், வேலை இல்லாத பட்டதாரி வாலிபராக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தந்தையின் செல்போன் நம்பருக்கு பதிலாக, வேறு ஒரு பெண்ணின் (கதாநாயகி) செல்போன் நம்பருக்கு 1,500 ரூபாய்க்கு 'ரீசார்ஜ்' செய்துவிட்டு, திரும்ப பணத்தை பெற அவர் மெனக்கெடும் காட்சிகளும், இறுதியில் போலீஸ் எஸ்.ஐ ஆக, போராடும் காட்சிகளிலும் விஷ்ணு விஷால், தன் தரமான நடிப்பை தந்து அசத்தியவர்.


'குடி'போதையில் எந்நேரமும் மிதக்கும் ஒரு பொறுப்பற்ற மகனாக, 'நீர்ப்பறவை' படத்திலும், இவரது நடிப்பு பேசப்பட்டது. இவரது படங்களில் குறிப்பாக, 'ராட்சசன்' படம், 'த்ரில்' ஆன கதையம்சத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படமாக அமைந்தது. பள்ளி மாணவிகளை கடத்தி, கொடூரமாக கொலை செய்யும் 'சைக்கோ' கொலைகாரனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால், அட்டகாசமான நடிப்பை தந்திருப்பார். படம் முழுக்க 'டிவிஸ்ட்' ஆக இருந்த இப்படம், பெரிய 'ஹிட்' அடித்தது.


அத்துடன் 'இன்று, நேற்று, நாளை' மற்றும் 'மரகதநாணயம்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாக இவருக்கு அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், சினிமா பக்கம் வந்துவிட்டார். நடிப்பு என்பதற்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை என்றாலும் சிறந்த நடிகராகவே உள்ளார். 'கதாநாயகன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.


இந்நிலையில், செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் நேற்று வெளியான படம் 'கட்டா குஸ்தி'. 'பிர்' என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு, விஷ்ணு விஷால் நடிப்பில் இப்படம் வெளியாகி உள்ளதால், மக்களும் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம், முதல் நாள் முடிவில் ரூ. 2 கோடி வரை வரை வசூலை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 2 கோடி ரூபாய் வரை வசூல் என்பது, அந்த படம் மெகா ஹிட் என்பதையே வெளிப்படுத்துகிறது. இப்போதெல்லாம், தியேட்டரில் படம் பார்க்கும் போதே அந்த படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வலிமை, ரசிகர்களின் கைகளில் அதாவது செல்போன் வடிவில் இருக்கிறது. படத்தை பற்றிய ரிசல்ட்டை அப்போதே மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பி விடுகின்றனர். அப்புறம் என்ன? 'பாஸிட்டிவ்' விமர்சனங்களுக்கு பதிலாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு தியேட்டர் 'ஹவுஸ் புல்' ஆகி விடுகிறது.

Updated On: 3 Dec 2022 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?