/* */

சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்; 'யசோதா' வருவது எப்போது?

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிய ‘ யசோதா’ குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்; யசோதா வருவது எப்போது?
X

குறிப்பிட்ட தேதியில், நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ படம் ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, 'யசோதா' படத்தில் நடித்துள்ளார். சண்டை காட்சிகள் நிறைந்த, த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகுந்த் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மணி ஷர்மா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரபல ஹாலிவுட் சண்டை இயக்குனர் யன்னிக் பென் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், ஆகஸ்ட் 12ம் தேதி, அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு பணிகள் தாமதமானதால், திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. யசோதா, படம் செப்டம்டர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 13 Aug 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்