/* */

'பாடும் நிலா' எஸ்.பி.பி. இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று

இனிய குரலால் நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட எஸ்.பி.பி. நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பாடும் நிலா எஸ்.பி.பி. இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று
X

தமிழ் திரையுலகில் தனது இனிய குரலால் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். எஸ். பி. பி. என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 1966 ஆம் ஆண்டு முதல் பாடத்தொடங்கிய இவரது இசை குரல், இனிய குரல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இதே நாளில் அடங்கியது. கொரோனா என்ற கொடிய நோய்க்கு பலியானவர்களில் நமது அன்புக்குரிய இசைக்கலைஞர் பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியமும் ஒருவர்.


1966 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் தனது இறுதி நாள் வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அவர் மொத்தம் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு 'பாடும் நிலா' என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு. கேளடி கண்மணி படத்தில் 'மண்ணில் இந்த காதல் இன்றி....'என மூச்சு விடாமல் இவர் பாடிய பாட்டு எந்த ஒரு ரசிகரின் மனதில் இருந்தும் நீக்க முடியாத பாடலாகும். இவரது பாடல் இடம்பெறாத திரைப்படமே இல்லை என்று கூறும் அளவிற்கு அவருடைய இசை சேவை இருந்தது.

இவர் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான தாமரை உள்பட ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் இந்திய திரை துறை பங்களிப்பிற்காக என். டி. ஆர் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இந்திய திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்ம விபூஷன் விருது இவரின் மறைவிற்குப்பின் இந்திய அரசால் வழங்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விழாவில் இவரது மகன் எஸ்.பி.பி. சரண் இந்தவிருதினை பெற்றுக்கொண்டார்.

இத்தகைய சிறப்புக்குய எஸ். பி. பாலசுப்ரமணியனின் இயற்பெயர் ஸ்ரீபதி பண்டித ராத்யுல பாலசுப்பிரமணியம் ஆகும். இவர் 1946 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பின்னணி பாடகராக இருந்தது மட்டுமின்றி இவராக இசையமைத்து பாடி நடித்த படங்களும் உண்டு. அந்த வகையில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை திறமை கொண்டவராக விளங்கினார்.

எஸ் .பி .பாலசுப்ரமணியம் இசை ஆர்வத்தை இளம் வயதிலேயே தனது தந்தை ஆர்மோனியம் வாசிக்கும் பொழுது கவனித்து ஆர்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். இவர் பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர் ஜெயந்தி பொறியியல் கல்லூரியில் மாணவராக சேர்ந்தார். ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இசையில் அதிக ஆட்டம் கொண்ட பாலசுப்ரமணியம் கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசை பெற்றார்.


ஆரம்ப காலத்தில் மெல்லிசை குழு ஒன்று நடத்தி வந்தார். இக்குழுவில் அனிருத்தா ஆர்மோனியம் ,இளையராஜா கிட்டார் பாஸ்கர் கங்கை அமரன் போன்றோர் பங்கு பெற்றனர். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ்.பி.பி., கோதண்டபாணி, கண்டசாலா ஆகியோர் நடுவராக இருந்து பங்கு பெற்ற பாடல் போட்டிகளில் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும் வட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த இவருக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும். பிபி ஸ்ரீனிவாஸ் இவருக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ,ஆங்கிலம் உருது போன்ற மொழிகளில் அந்த பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். எஸ் பி பாலசுப்ரமணியன் பின்னணி பாடகராக முதன் முதலில் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மரியாதை ராமன் என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக எஸ்.பி.கோதண்டபாணி இசையில் பாடினார்.இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.


அதனைத் தொடர்ந்து அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது. இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.எஸ். ஜானகியுடன் இவர் பாடிய முதலாவது பாடல் கன்னிப்பெண் என்ற படத்திற்காக 'பௌர்ணமி நிலவில் பணி விழும் இரவில், என்பதாகும் . 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காக பாடல்களை பாடியதன் மூலம் உலக அளவில் பிரபலமானார்எஸ்.பி.பி. சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக கருதப்படுகிறது. எஸ். பி பாலசுப்ரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் ஜானகியோடு இணைந்தும் தனித்தும் சக பின்னணி பாடகர்களுடன் சேர்ந்தும் 1980 வரை பல பாடல்களை பாடினார். தமிழ் திரை உலகில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப் பாடல்கள் நிறைய உள்ளன இந்தி திரைப்படத்திலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களை பாடி உள்ளார். 1989 முதல் பாலசுப்ரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பின்னணி பாடி வந்தார். கமல்ஹாசன் நடித்த ஏக்துஜே கேலியே இப்படத்தில் இவர் பாடிய இந்தி பாடல் ஹிந்தி அறியாத தமிழ் ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தது.

தமிழ் திரை உலக சாதனையோடு தனது கலை உலக சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை எஸ்.பி.பி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் .உண்மை நிலை என்ற நிகழ்ச்சியை தெலுங்கு மொழியில் நடத்தினார்.

பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாட மறந்து தனது குரலை நிறுத்தியது மட்டுமல்ல மூச்சையும் அடக்கி இன்றுடன் இரண்டு ஆண்டு முடிகிறது.

Updated On: 26 Sep 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  2. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  3. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  4. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  5. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  6. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  7. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  8. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  9. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  10. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா