/* */

லியோ பட தியேட்டர் வாசலில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடி!

லியோ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ஜோடி.

HIGHLIGHTS

லியோ பட தியேட்டர் வாசலில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடி!
X

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள லியோ திரைப்படம் ஓடும் தியேட்டரில் வைத்து பிரபல ஜோடி தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை செய்துள்ளது. இதனால் அந்த ஜோடி பிரபலமாகியுள்ளது. அந்த ஜோடி குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.

முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடவேண்டும் என்று தமிழகத்தில் 9 மணிக்கு காட்சி நேரம் என்றால் 7 மணிக்கே திரையரங்குகளில் கூடி அமர்க்களப்படுத்திவிட்டனர் ரசிகர்கள். இதுமட்டுமின்றி தமிழகத்தில் பார்த்தால் நேரமாகிவிடும் என நேற்றே பெங்களூரு போன்ற பக்கத்து மாநிலத்திலிருக்கு நகரங்களுக்கு பயணமாகி அதிகாலையிலேயே படத்தைப் பார்த்துவிட்டு திரும்புகின்றனர்.

படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் அதிக வன்முறை இருப்பதாக சொல்லப்பட்டாலும் இது ஆக்ஷன் படம் என்பதால் நிச்சயமாக அதனை விரும்பும் ரசிகர்களே திரையரங்குக்கு செல்வார்கள் என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருப்பதை நினைவுகூர்வோம்.

படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை முதல் காட்சி பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடியும்.

Updated On: 19 Oct 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  4. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  6. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  9. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  10. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...