/* */

பாடிக் கொண்டிருந்த போதே சரிந்து விழுந்து பிரபல பாடகர் மரணம்..!

பிரபல பின்னணி பாடகர், பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பாடிக் கொண்டிருந்த போதே சரிந்து விழுந்து பிரபல  பாடகர்  மரணம்..!
X

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஆழப்புழையில் உள்ள பத்திரப்பள்ளியில் நேற்றிரவு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 'ப்ளூ டைமண்ட்ஸ்' என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சி அது. கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை எடவா பஷீர் மேடையில் ரசித்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஆழப்புழையில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மறைந்த பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியவர். அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 29 May 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...