/* */

டாணாக்காரன் பிரிவியூ ஷோ இன்னிக்கு மார்னிங் இருக்குது

Tanakkaran-பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியார் பிரபு இணைஞ்சு தயாரிச்ச படம் 'டாணாக்காரன்'

HIGHLIGHTS

டாணாக்காரன் பிரிவியூ ஷோ இன்னிக்கு மார்னிங் இருக்குது
X

Tanakkaran-'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியார் பிரபு இணைஞ்சு தயாரிச்ச படம் 'டாணாக்காரன்'.

இப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் டைரக்ட் செஞ்சிருக்கார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்', 'விடுதலை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தில் நாயகனாக விக்ரம் பிரபுவும். நாயகியாக அஞ்சலி நாயரும் நடிச்சிருக்காய்ங்க. இவர் 'நெடுநல்வாடை' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். இவர்களுடன் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிச்ச இப்படம் குறித்து இப்பட இயக்குநர் தமிழிடம் பேச்சுக் கொடுத்த போது, "போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் படம் இது.

கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரஸ்யங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும். எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறாய்ங்க. அவய்ங்க என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கேன்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்புக் கொடுத்து நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்தப் படம் விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம் " அப்படீன்னார்.

நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பிரிவியூ ஷோ இன்னிக்கு 11 மணிக்கு இருக்குது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  6. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  7. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  8. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  9. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  10. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...