actress asin recent news-தமிழ் சினிமாவில் காணாமல் போன நடிகர் நடிகைகள் யார், யார் என தெரியுமா?

Actress Asin Recent News- தமிழ் சினிமாவில் காணாமல் போன நடிகர் நடிகைகள் யார், யார் என்பதை அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
actress asin recent news-தமிழ் சினிமாவில் காணாமல் போன நடிகர் நடிகைகள் யார், யார் என தெரியுமா?
X

amala paul latest news-நடிகை அமலா பால் (கோப்பு படம்)

Actress Asin Recent News-திரை உலகம் என்பது நீர்க்குமிழி போன்றது. நீர்க்குமிழியானது தண்ணீரில் எவ்வளவு அழகாக காணப்பட்டாலும் திடீரென்று மறைந்து போகும். அது போன்று தான் சினிமா நடிகர், நடிகைகளின் மார்க்கெட் மற்றும் வாழ்க்கை வரலாறும். ஒரே படத்தில் கோபுர உச்சிக்கு சென்ற நடிகர் நடிகைகளும் உண்டு. பல படங்களில் நடித்து படிப்படியாக கோபுர உச்சியை அடைந்தவர்களும் உண்டு. அப்படி வெற்றி பெற்றவர்கள் நீடித்து நிலைத்து நிற்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரை உலகில் பல நடிகர் நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள். அவற்றில் சிலரை பற்றி இங்கே பார்ப்போம்.

actress asin recent news, asin latest news, vadivelu newsஅப்படி காணாமல் போனவர்களில் ஒருவர் அமலா பால்.


தமிழில் மைனா திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை அமலாபால். இவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி அடையவில்லை. பின்னர் தனது வசீகரமான அழகையும், கவர்ச்சியையும் காட்டி தனது இமேஜை வளர்த்து வந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் திருமண வாழ்க்கையிலும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து போனார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது கோவா கடற்கரையில் இருந்து கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்து நடிகை அசின்


actress asin recent news, asin latest news, vadivelu newsமலையாள வரவான நடிகை அசின் தமிழ் திரை உலகில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து பிரபல நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றார்.பின்னர் அந்த வெற்றியை இந்தி சினிமாவிலும் பெற வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்து மும்பைக்கு சென்றார். அதில் ஓரளவு அவருக்கு வெற்றியும் கிடைத்தது .அப்போது சல்மான் கானுடன் இவர் நெருங்கி பழகியதாக பாலிவுட் திரை வட்டாரத்தில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ் நடிகர், நடிகைகள் ஸ்ரீலங்கா படபிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதை மீறி கண்டு கொள்ளாமல் ஸ்ரீலங்காவிற்கு சென்று ஒரு படப் படிப்பிலும் அசின் கலந்து கொண்டார். அப்போது அங்கு அதிபராக இருந்த ராஜபக்சே குடும்பத்துடன் ஒரு விருந்திலும் கலந்து கொண்டார் .இதன் பின்னர் ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை தமிழ் சினிமா உலகமும் இவரை வெறுத்து ஒதுக்கியது வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதால் தமிழ் திரைப்படத்துறையில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

நடிகைகளின் வரலாறு இப்படி என்றால் நடிகர்களும் திடீர் என காணாமல் போய் இருக்கிறார்கள்.


actress asin recent news, asin latest news, vadivelu newsஅவர்களில் ஒருவர் தான் மோகன் பெங்களூரைச் சேர்ந்த மோகன். தலையை ஆட்டி ஆட்டி நடிக்கும் விதமே வித்தியாசமானது. மைக் மோகன் என்று இவரை தமிழ்த்திரை உலகினர் அழைத்து வந்தனர். இவரது படங்கள் அனைத்தும் வெள்ளிவிழா தான். ஆனால் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வரும் வேளையில் இவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவரை விட்டு விலகி விட்டார் பின்னர் சொந்த குரலில் பேசி பட வாய்ப்புகளை இழந்த இவர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.


actress asin recent news, asin latest news, vadivelu newsதமிழ் திரை உலகில் நடிகர் வடிவேலு ஜோக்கிற்கு பஞ்சமே கிடையாது. இன்றும் வடிவேலு ஜோக் என்றால் அதற்கு ஒரு தனி மவுசு உண்டு .தமிழ் திரை உலகின் காமெடி உலகில் உச்சத்தில் இருந்த நடிகர் வடிவேல் அரசியல் பேசியதால் பட வாய்ப்புகளை இழந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை .வடிவேலுவைப் போல அவ்வளவு வேகமாக யாரும் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது . வடிவேலு நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து தேவையில்லாத பேச்சுக்களை ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரை வாழ்வு ஓரங்கட்டப்பட்டது. இப்போது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.


actress asin recent news, asin latest news, vadivelu newsஅப்பாஸ் என்று ஒரு நடிகர் உண்டு.ஞாபகம் இருக்கிறதா இளம் வயது . பால் வடியும் மிகவும் அழகான ,வசீகரமான முகம் அவருக்கு பிளஸ் பாயிண்ட் .இவற்றையெல்லாம் வைத்து பல படங்களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். கதை தேர்ந்தெடுக்க தெரியாமல் முக்கியமான படங்கள் அதாவது ஜீன்ஸ் போன்ற படங்களை நிராகரித்து பின்னர் எதில் நடிப்பது என்று தெரியாமல் நடித்து இன்று அவர் சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என திரை உலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-10-06T15:47:32+05:30

Related News

Latest News

 1. உலகம்
  கனடாவை தாக்கிய 'ட்ரைடெமிக்' எனப்படும் மூன்று வைரஸ் தாக்குதல்
 2. இந்தியா
  சபரிமலையில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு சோதனை
 3. புதுக்கோட்டை
  நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை...
 4. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 5. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 6. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 7. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 8. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 9. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 10. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...