/* */

அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்க போகும் பிரம்மாண்டமான இயக்குனர் யார் தெரியுமா?

அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்க போகும் பிரம்மாண்டமான இயக்குனர் யார் என்பதை அறிய தொடர்ந்து படித்து தான் பாருங்களேன்.

HIGHLIGHTS

அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்க போகும் பிரம்மாண்டமான இயக்குனர் யார் தெரியுமா?
X

நடிகர் அஜித்குமார்.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateநடிகர் அஜித் குமார் நடித்த பொங்கல் ரிலீஸ் ஆகி வெளி வந்த துணிவு படம் சக்கை போடு போட்டு வருகிறது. வசூலில் சாதனை படைத்து இருப்பதால் அவரது அடுத்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அஜித் அடுத்த படத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateஅந்த வகையில் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு ஏகே62 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போது இந்த படத்தில் விக்னேஷ் சிவன் வேண்டாம் என்று வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்ய உள்ளதாக தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே ஏகே 63 இயக்குனரை பற்றி பேச்சு இப்போதே வர தொடங்கியுள்ளது.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateஎப்போதுமே அஜித் ஒரு இயக்குனருடன் கூட்டணி போட்டால் அடுத்தடுத்த படங்களும் அவரது இயக்கத்தில் தான் நடித்து வருவார். ஆனால் ஏகே 62 படத்திற்கு பிறகு வேறு ஒரு இயக்குனர் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம். இதற்கான கதை ஆலோசனை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஒருவருடன் அஜித் கூட்டணி போடுவது சில காலமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதாவது இயக்குனர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டார். ஆனால் அஜித்துடன் தற்போது வரை இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateமேலும் ஏற்கனவே ஷங்கர் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். ஆகையால் ஏகே 63 படத்தை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஷங்கர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார்.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateதமிழில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த படத்திற்கான யோசனையில் ஷங்கர் இருக்கிறாராம். ஆகையால் அடுத்ததாக முதல்முறையாக அஜித், ஷங்கர் கூட்டணியில் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ak 63 director, ak 63 update, AK 63 Recent Updateஆனால் ஷங்கருக்கு போட்டியாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். மேலும் இந்த இரு படங்களுமே கண்டிப்பாக உருவாகும் என்றாலும் அஜித் முதலில் ஷங்கரை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது சுகுமாரை தேர்ந்தெடுக்க போகிறாரா? என்ற கேள்வி எழுந்து குழப்பமும் நிலவி வருகிறது.

Updated On: 30 Jan 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...