வாரிசு vs துணிவு படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Varisu vs Thunivu Box Office Collections Day 10 - வாரிசு மற்றும் துணிவு படத்தின் 10 நாள் வசூல் குறித்த விபரங்களை தற்போது பார்ப்பபோம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வாரிசு vs துணிவு படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
X

Varisu vs Thunivu Box Office Collections Day 10 - தளபதி விஜய்யின் வாரிசு பாக்ஸ் ஆபிஸில் அபாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் சமீபத்தில் உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ 210 கோடியைத் தாண்டியது. தற்போது உள்நாட்டிலேயே ரூ.150 கோடியை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. ஜனவரி 19ஆம் தேதி வரை (நேற்று முன்தினம்) இப்படம் ரூ.131 கோடி வசூல் செய்துள்ளது.

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கு கடும் போட்டியாக வாரிசு படம் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 11ம் தேதியன்று பாக்ஸ் ஆபிஸில் துணிவு படத்துடன் வாரிசு மோதியது. வெளியான 10வது நாளில், வாரிசு தனது கனவு ஓட்டத்தைத் தொடர்ந்துள்ளது. அஜித்தின் படம் ரூ 100 கோடி கிளப்பில் நுழைய இன்னும் சில காலம் எடுக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் துணிவு கணிசமான வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது.

varisu vs thunivu total collection

பாக்ஸ் ஆபிசில் வாரிசு:

தளபதி விஜய்யின் வாரிசு படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்து முதல் வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்றும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. வார நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. 10வது நாளில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து வாரிசு ரூ.4 கோடி இந்திய அளவில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மொத்த வசூல் ரூ.136 கோடியாக உள்ளது. ஜனவரி 20ம் தேதியன்று வாரிசு ஒட்டுமொத்தமாக 32.27% தமிழ் ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளிநாட்டு சந்தையிலும் குறிப்பாக இங்கிலாந்தில் பெரும் வசூலை குவித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிசில் துணிவு:

துணிவு படம் வெளியான அன்று ரூ. 24 கோடியை வசூலித்துள்ளது. இது வாரிசு படத்தின் வசூலில் முன்னிலை என்றே கூறலாம். இதனைத்தொடர்ந்து துணிவு படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. வெளியான பத்தாவது நாளில், அஜித் படம் 3 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. படத்தின் மொத்த வசூல் 97 கோடிக்கு மேல். ஜனவரி 20ம் தேதி அன்று துணிவு ஒட்டுமொத்தமாக 33.11% தமிழ் ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, துணிவு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் லாபகரமான வணிகத்தைச் செய்து வருவதாகப் பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி இருவரின் ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தி வருகிறது.

Updated On: 2023-01-21T12:24:03+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...