/* */

இயக்குனர் மற்றும் நடிகர் டி.பி. கஜேந்திரன் காலமானார்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் டி.பி. கஜேந்திரன் இன்று காலமானார்.

HIGHLIGHTS

இயக்குனர் மற்றும் நடிகர் டி.பி. கஜேந்திரன் காலமானார்
X
இயக்குனர் மற்றும் நடிகர் டி.பி. கஜேந்திரன்.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் டி.பி. கஜேந்திரன் சென்னையில் உள்ள வீ்ட்டில் இன்று காலமானார்.

தமிழ் திரையுலகில் வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலமாக 1988ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் டி.பி.கஜேந்திரன். ராமராஜன் நடித்த எங்க ஊரு காவல்காரன், கார்த்தி நடித்த பாண்டிய நாட்டுத் தங்கம், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

படங்களை இயக்கியது தவிர ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழரான டி.பி.கஜேந்திரனை, ஸ்டாலினும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில், இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தனது தோழனை இழந்து விட்டதாக உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். இது தவிர தமிழ் திரை உலகினர் பலரும் டி.பி. கஜேந்திரன் மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

Updated On: 6 Feb 2023 6:34 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!