/* */

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் மாதம் டும்.. டும்... தெரியுமா?

hansika motwani marriage date, hansika motwani getting marriedநடிகை ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

HIGHLIGHTS

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு டிசம்பர் மாதம் டும்.. டும்... தெரியுமா?
X

hansika motwani marriage date, hansika motwani getting marriedநடிகை ஹன்சிகா மோத்வானி.

hansika motwani marriage date, hansika motwani getting marriedதமிழில் 'மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. மும்பை வரவான இவர் மாப்பிள்ளை படத்தை தொடர்ந்து தமிழில் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, போகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்தார். நடிகர்கள் சிம்பு, சூர்யா, விஜய், விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.


hansika motwani marriage date, hansika motwani getting marriedபார்ப்பதற்கு குஷ்பு போல் குண்டாக அமுல் பேபி போல் இருப்பதால் இவரை சின்ன குஷ்பூ என்று ஆரம்பத்தில் தமிழ் தலை உலகமே புகழ்ந்தது. இவர் குஷ்பூவின் தங்கையா என கேள்வி எழுப்பிய ரசிகர்களும் உண்டு. குண்டான உடம்பே இவருக்கு எதிரியாகவும் போனது. உடம்பை குறைக்க முடியாமல் போனதால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் ஹன்சிகா மோத்வானி அதிக அவர் ஆர்வம் காட்டினார். அங்கும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஹிந்தியில் பெப்பி சாங் பாட ஆரம்பித்தார்.

hansika motwani marriage date, hansika motwani getting marriedதற்போது ஹன்சிகா மோத்வானி தமிழில் நான்கு படங்களிலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மஹா என்ற படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல். இவருக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தற்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக நடித்து முடிக்கும் பிசியில் ஹன்சிகா மோத்வானி உள்ளார்.

hansika motwani marriage date, hansika motwani getting marriedஹன்சிகா மோத்வானி திருமணம் காதல் திருமணமா அல்லது அரேஞ்சிட் மேரேஜா, மாப்பிள்ளை யார்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதுவும் எங்கு நடைபெறுகிறது என்று கேட்டால் ராஜஸ்தான் மாநிலத்தின் மிக பிரபலமான 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டையில் ஹன்சிகா மோத்வானி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

hansika motwani marriage date, hansika motwani getting marriedமிகவும் ஆடம்பரமான முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெற இருப்பதால் 450 ஆண்டுகால அரண்மனையை புதுப்பிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பெற்று 50 படங்களுக்கு மேல் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் ஹன்சிகா மோத்வானி தொடர்ந்து நடிப்பாரா? அல்லது கணவர், குடும்ப வாழ்க்கை, குழந்தை குட்டி என லைப்பில் ஷெட்டில் ஆகப்போகிறாரா? என்பது போன்ற விவரங்களும் இதுவரை தெரியவில்லை.

Updated On: 17 Oct 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...