/* */

மொட்டையடித்த தனுஷ்! திருப்பதியில் பலமான வேண்டுதலாம்!

திருப்பதியில் மொட்டையடித்த தனுஷ். மகன்களுக்கும் மொட்டை போட்டு வேண்டுதல். புதிய திரைப்படத்தில் புதிய லுக்.

HIGHLIGHTS

மொட்டையடித்த தனுஷ்! திருப்பதியில் பலமான வேண்டுதலாம்!
X

நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்து தரிசனம் செய்துள்ளார். இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது. இவரின் தனிப்பட்ட வேண்டுதல் காரணமாகவும், திரைப்படத்துக்காகவும் சேர்த்தே மொட்டையடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தனுஷ் தனது 50வது படம் மிகப் பெரிய ஹிட்டாக வேண்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்து மொட்டையடித்துள்ளார். தனது மகன்களுக்கும் மொட்டை போடச் செய்திருக்கிறார் தனுஷ். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதனையடுத்து தனது சொந்த இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு முடிந்துவிட்டாலும், இன்னும் சில நாட்களுக்கு பேட்ச்அப் ஒர்க் காட்சிகளைப் படம்பிடிக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திலிருந்து வெளியே வந்த தனுஷ், தனது அடுத்த படத்துக்கு தயாராகும் வகையில் மொட்டை அடித்துள்ளார். திருப்பதிக்கு தனது இரு மகன்களோடு சென்ற தனுஷ் மொட்டை அடித்து வேண்டியுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரே தனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார். இயக்கத்தோடு சேர்த்து இந்த படத்தில் பாடல்களையும் எழுதுவார் என்று கூறப்படுகிறது.

Updated On: 3 July 2023 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  2. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  3. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  4. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  7. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  8. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  9. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  10. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...