/* */

தனுஷ் நடிக்கும் 'வாத்தி ' பட ஆடியோ லான்ஞ்ச்.. எப்போது தெரியுமா?

Vaathi Grand Audio Launch Details - தனுஷ் நடிக்கும் இருமொழி படமான 'வாத்தி' ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

தனுஷ் நடிக்கும் வாத்தி  பட ஆடியோ லான்ஞ்ச்.. எப்போது தெரியுமா?
X

நடிகர் தஷஷ்.

Vaathi Grand Audio Launch Details - தனுஷ் நடிக்கும் இருமொழி படமான 'வாத்தி' ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

தனுஷ் நடிக்கும் இருமொழி படமான 'வாத்தி'யின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வு, பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கும் என்றும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் உரையை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

audio launch of Dhanush's upcoming film Vaathi

இந்த படம் 2023ம் ஆண்டின் தனுஷின் முதல் வெளியீடாக இருக்கும். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகவுள்ளதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சில காரணங்களால் தங்கள் திட்டங்களை ஒத்திவைக்க முடிவு செய்தனர்.

கடந்த 2022ல் நான்கு படங்கள் வெளியான நிலையில், தற்போது தனுஷ், கேப்டன் மில்லரின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படம் அவரது திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் 1930களில் நடக்கும் ஒரு சாகச அதிரடி படமாக உள்ளது.

இந்நிலையில், தனுஷ் மீண்டும் இயக்குநரின் தொப்பியை அணிய உள்ளார். அவர் மெகாஃபோன் இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இதில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Vaathi Audio Launch 4th February 2023

தெலுங்கில் 'சர்' என்ற பெயரில் வெளியாகும் 'வாத்தி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். யுவராஜ் மற்றும் நவீன் நூலி ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை கையாண்ட இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தனுஷ் தனது அடுத்த படமான 'வாத்தி' படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்தருக்கும் நிலையில், அந்த படத்தின் இயக்குனர் திருமணம் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த விழாவில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் பூஜா திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தி சுரேஷ், நிதின், அவரது திருமணத்தில் மனைவி ஷாலினி, வெங்கி குடுமுலா மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Feb 2023 6:41 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!