/* */

ஜப்பானியர்களை ஆட வைத்த நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் பட பாடல்

Japanese Couple Dancing for Megham Karukath - நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் பட பாடல் ஒன்று ஜப்பானியர்களையும் ஆட வைத்துள்ளது.

HIGHLIGHTS

ஜப்பானியர்களை ஆட வைத்த நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் பட பாடல்
X

Japanese Couple Dancing for Megham Karukath - சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தில் பாரதிராஜாவும், பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் முறையே தனுஷின் தாத்தா - அப்பாவாக நடித்துள்ளனர். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

அனிருத் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகின. அதில் மேகம் கருக்காத எனும் மெலோடி பாடல் காதல் ரசம் ததும்ப பலரது விருப்ப பிளே லிஸ்டில் ஆன் ரிப்பீட் மோடில் ஒலிக்க ஆரம்பித்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் அமைத்த ஒரு சிக்னேச்சர் ஸ்டெப் இளசுகளிடையே வைரலானது. ஆம், பலரும் சோஷியல் மீடியா, ரீல்ஸ் என இந்த ஸ்டெப்பை ஆடி பதிவிட்டுள்ளனர்.


இந்நிலையில் இந்த பாடலுக்கு ஜப்பானிய ஜோடிகள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பாக பாடலில் இடம்பெற்றுள்ள அந்த சிக்னேச்சர் ஸ்டெப்பையும் இந்த ஜப்பானிய ஜோடி ஆடியுள்ளனர். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் மத்தியில் கூட மேகம் கருக்காதா பாடல் வைரலாகியுள்ளதையொட்டி இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?