/* */

விஜய் குறித்து டென்சல் ஸ்மித்! என்ன சொன்னார் தெரியுமா?

லியோ படம் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் டென்சல் ஸ்மித் பாராட்டி பேசியுள்ளார்.

HIGHLIGHTS

விஜய் குறித்து டென்சல் ஸ்மித்! என்ன சொன்னார் தெரியுமா?
X

லியோ படத்தின் புரமோஷன்கள் சூடுபிடித்துள்ள நிலையில், டென்சில் ஸ்மித் தளபதி விஜய் குறித்தும் லியோ படம் குறித்தும் பேசியுள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன.


மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜுன் இணைந்துள்ள படம் லியோ. இந்த படத்தின் புரமோஷன்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடித்துள்ளார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனட் படத்தில் நடித்துள்ள டென்சல் ஸ்மித்தான் அவர். ஸ்மித் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


லியோ படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியில் வெளியாகியுள்ள போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர்களும் இயக்குநரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித் தனது பேட்டியில் படம் குறித்தும் விஜய் குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோரும் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெற்றது. காஷ்மீர் ஷெட்யூலில் டென்சல் ஸ்மித் பங்கேற்கவில்லை. மாறாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் டென்சல் கலந்துக் கொண்டு நடித்து முடித்துள்ளார். இவரது கேரக்டருக்கான காட்சிகளை 3 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனை டென்சலே பாராட்டி பேசியுள்ளார். குறிப்பிட்ட கால்ஷீட்டில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து முடிக்கிறார்கள் என வியந்து பாராட்டியுள்ளார்.

படத்தில் மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் என அதிகமான நடிகர்கள் வில்லன் கேரக்டர்களில் நடித்துவரும் நிலையில், டென்சல் ஸ்மித்தும் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் சில காட்சிகள் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Updated On: 22 Sep 2023 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!