/* */

DD Returns பேயுடன் விளையாடும் சந்தானம் அன் கோ! வயிறு வலிக்க சிரிக்கலாம்!

மீண்டும் சந்தானத்தின் டெம்ப்ளேட் காமெடி! DD Returns டிரைலர் இதோ!

HIGHLIGHTS

DD Returns பேயுடன் விளையாடும் சந்தானம் அன் கோ! வயிறு வலிக்க சிரிக்கலாம்!
X


சந்தானத்தின் டிரேட்மார்க் காமெடி பேய் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ். தில்லுக்கு துட்டு 1, 2 படங்களை ராம் பாலா இயக்கியிருந்த நிலையில், அடுத்து பாகத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் பேய்களுடன் இணைந்து மரண காமெடி செய்து அனைவரையும் மகிழ வைக்கப் போகிறார் சந்தானம். ரசிகர்களுக்கு நல்ல டிரீட் காத்திருக்கிறது என்பதை டிரைலரை வைத்தே சொல்ல முடியும். அந்த அளவுக்கு பேய்களை காமெடி செய்தே பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். நம்மை திரையரங்குக்கு அழைக்கிறார்கள் சிரித்து சிரித்து சாகடிப்பார்களா சிரிக்கவைத்து கொல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் செய்யவேண்டும்.

பிரதீப் ராவத் இந்த படத்தில் பிரெஞ்ச் பேய் வில்லனாக அசத்தியிருக்கிறார். மண்டேலா யோகிபாபு, விடுதலை சூரி, மாமன்னன் வடிவேலு என காமெடி நடிகர்கள் தங்களது இன்னொரு பக்கத்தைக் காண்பித்து அசத்தி வெற்றிப் படத்தை கொடுத்துவிட்ட நிலையில், காமெடியனாக இருந்து ஹீரோவான சந்தானம் மீண்டும் தனது பலமான காமெடி கதையைத் தேர்வு செய்து வெற்றிக்காக காத்திருக்கிறார்.

பேய் வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டா வெடி சிரிப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேயின் மனைவியுடன் சேர்ந்து மொட்டை ராஜேந்திரன் போடும் ஆட்டம் வயிற்றைப் புண்ணாக்கி விடும்போல தெரிகிறது. வெறித்தனமான டிரைலர்.

Updated On: 14 July 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை