விஜய் படத்தில் வில்லனாக 'சியான்' விக்ரம், 'க்ளைமேக்ஸ்' சில் கமல் - அடுத்தடுத்து வருது 'ட்விஸ்ட்'

Vijay Tamil Film- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் நடிகர் 'சியான்' விக்ரம், 'க்ளைமேக்ஸ்' காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விஜய் படத்தில் வில்லனாக சியான் விக்ரம், க்ளைமேக்ஸ் சில் கமல் - அடுத்தடுத்து வருது ட்விஸ்ட்
X

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்தில், நடிகர் கமல், ‘சியான்’ விக்ரம் நடிக்க உள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது.

Vijay Tamil Film- மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது நடிகர் விஜய்க்கு 67-வது படம். இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்-நடிகைகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இதில் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதாக தெரிகிறது.


இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலும் விஜயுடன் நடிக்கிறார். பகத் பாசில் ஏற்கனவே 'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்தார். விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை செய்த 'புஷ்பா' படத்தில் பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது, விரைவில் ரிலீஸ் ஆக உள்ள உதயநிதியின் 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், நடிகர் விக்ரம் ஆகியோரும் தளபதி விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கமல்ஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றலாம் என கூறப்படுகிறது. அதுபோல் நடிகர் விக்ரம் விஜய் படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தளபதி 67 படத்தில் ஏற்கனவே ஒரு வில்லன் பட்டாளமே இருக்க, விக்ரம் தான் அவர்களுக்கு எல்லாம் தலைமை வில்லனாம்.


லோகேஷ் கனகராஜின் படத்தில் வில்லன்கள் செம மாஸ் காட்டுவது வழக்கம். ஹீரோவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லன்கள் நடிப்பில் கெத்து காட்டுவர். அதுபோல், விஜய் படத்திலும், வில்லன்களின் அட்டகாசம் தொடர வாய்ப்புள்ளது.

சமீப காலமாக, ஒரு படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிப்பது டிரெண்டிங் ஆக மாறி விட்டது. இதை முதன் முதலில் துவக்கி வைத்தவர் லோகேஷ் கனகராஜ் என்றே சொல்லலாம். 'விக்ரம்' படத்தில், கமலுடன் சூர்யாவை நடிக்க வைத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என, முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடித்தனர்.


விஜய் நடித்த 'வாரிசு' படத்திலும் அதே நிலை இருந்தது. இப்போது கமல், விக்ரம், அர்ஜூன், பகத் பாசில் என பலரும் விஜய் படத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக, நட்சத்திர பட்டாளங்களாக நடிப்பது, ரசிகர்களை .உற்சாகப்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கும் ஒரு புதிய யுக்தியாகவும் கூறப்படுகிறது.

விஜய் படத்தில், நடிகர்கள் கமல், விக்ரம் நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல், நாளை வெளியாகும் என தெரிகிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2023-01-25T12:21:50+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...