/* */

கோடிக்கணக்கில் செலவு.. பிரமாண்ட வீடு.. ரசிகர்களை பிரம்மிக்க வைத்த பூஜா ஹெக்டே

actress pooja hegde home tour -நடிகை பூஜா ஹெக்டே கோடிக்கணக்கில் செலவழித்து வீட்டை பிரமாண்டமாக மாற்றியது ரசிகர்களிடையே பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோடிக்கணக்கில் செலவு.. பிரமாண்ட வீடு.. ரசிகர்களை பிரம்மிக்க வைத்த பூஜா ஹெக்டே
X

பூஜா ஹெக்டே வீடு.

actress pooja hegde home tour - நடிகை பூஜா ஹெக்டெ கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2012 முதல் 2022 வரையிலான தனது திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 15 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து களமிறங்க முடியும் என்று எதிர்பார்த்த பூஜா ஹெக்டே, இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனைத்தொடர்ந்து தமிழில் ராசி இல்லாதவர் எனப் பெயர் எடுத்த பூஜா ஹெக்டே, மீண்டும் தெலுங்கு திரையுலகின் பக்கம் திரும்பினார். இவர் தற்போது சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்‌ஷன் படமான இந்த படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆக்‌ஷன் நடிப்புக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கோடிக்கணக்கில் செலவு செய்து தனது வீட்டை குட்டி சொர்க்க பூமியாக மாற்றியுள்ளார். ஏசியன் பெயிண்ட்ஸ் வெர் தி ஹார்ட் இஸ் நிறுவனத்திற்காக ஹோம் டூர் நடத்தி உள்ளார். அந்த வீடியோவில் கதவை திறந்து அழகான வார்த்தைகளால் ரசிகர்களை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் பூஜா ஹெக்டே.

வீட்டிற்குள் சென்றதும் ஆறு இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு மேஜை நம்மை அழகாக வரவேற்கிறது. மேலும், அறையின் ஜன்னல் மெல்லிய வெள்ளை நிற திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. அறையின் மறுபுறம் சமையலறை, பளிங்கு பூச்சுடன் ஒரு தீவு போல பரந்து விரிந்து இருக்கிறது. சமையலறை அலமாரிகள் ப்ளூ மற்றும் வெள்ளை கவுண்டர்கள் உள்ளன.

pooja hegde house

பூஜாவின் படுக்கையறையில் அவர் விரும்பிய அனைத்து படங்களின் போஸ்டர்களையும் தொங்கவிடப்பட்டுள்ளன. படுக்கையறையில் பட்டு போல பஞ்சு மொத்தையும், பார்வையாளர்களுக்கான பெஞ்ச் மற்றும் ப்ரொஜெக்டர் திரையும் உள்ளது. மேலும்,அலங்கர விளக்குகள் பிரமிக்கவைக்கும் இன்டிரீயர் டிசைன்கள் என ஒவ்வொன்றும் நமது கண்ணுக்கு விருந்தாக இருந்தன. இந்த வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏக்கத்துடன் இது வீடா சொர்க்க பூமியா என மொய்மறந்து ரசித்து வருகின்றனர்.

பூஜா தனது வீட்டைப் பற்றி கூறும்போது, ​​"எனது பெற்றோர் இருவருமே வேலை செய்கிறார்கள். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், என் அப்பா வேலையிலிருந்து திரும்பி வந்ததும், அவர் ஒருபோதும் வேலை அல்லது மன அழுத்தத்தை வீட்டிற்கு கொண்டு வரவில்லை. அவர் எப்போதும் ஒரு குழந்தையைப் போல வீட்டிற்கு வந்துகொண்டைிருப்பார். எங்களுடன் விளையாடுவார். எனவே நான் வீட்டை பார்க்கும் எனக்கு பாதித்ததால் தான் மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 19 Nov 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  3. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு