/* */

நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

complaint against yogibabu in producer association - தாதா படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
X

யோகி பாபு.

complaint against yogibabu in producer association - எனிடைம் மணி பிலிம்ஸ் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'தாதா'. முக்கிய வேடங்களில் யோகிபாபு, நிதின்சத்யா ஆகியோர் நடிக்கின்றனர். காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஷ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரையுலக பிரபலங்கள் டிரைலரை வெளியிட தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ், கலைப்புலி ஜி.சேகரன் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளரும், நடிகருமான பாபுகணேஷ், "இந்தப் படத்தில் நடித்த யோகி பாபு, நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன், ஹீரோவாக நடிக்கவில்லை, காமெடியனாக நடிக்கிறேன் என்று கூறி வருகிறார். இது சோகமான ஒன்று. நீங்கள் நகைச்சுவை நடிகர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் நடிக்கும் படம் ஓட வேண்டும்; தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

ஒரு படத்தில் கிட்டத்தட்ட 200 பேர் வேலை செய்கிறார்கள். அந்த 200 பேரின் குடும்பத்தை நினைத்துப் பேச வேண்டும். தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் படத்தை பிரமாண்டமாக வெளியிடுகிறார் என பேசினார்.

தயாரிப்பாளர் மதுரை செல்வம் பேசுகையில், "சிறிய படம் பெரிய படம் என்று இல்லை. எல்லாமே பெரிய படம். எந்தப் படத்தில் நடித்தாலும் நடிகர்கள் இலவசமாகவா நடிக்கிறார்கள். அனைத்து படங்களும் கேமரா மூலம் தான் எடுக்கப்படுகிறது. எல்லாப் படங்களும் திரையில்தான் காண்பிக்கப்படுகின்றன; தரையில் அல்ல. கின்னஸ் கிஷோர் தயாரித்துள்ள இந்த 'தாதா' வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Refusal to act after getting money

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது, "தாதா என்றால் மகாராஷ்டிராவில் சிறந்தவர், மூத்தவர், தாதா என்று பொருள். வங்க மொழியில் மரியாதைக்குரியவர் என்று பொருள். ஆனால் தமிழில் இதற்கு வேறு அர்த்தம் உண்டு. திரைப்பட தயாரிப்பாளர்களும் சால்மன் மீன்களும் ஒன்று. சால்மன் மீன்கள் நதியில் பிறந்து பின்னர் மீண்டும் நதிக்கு வந்து முட்டையிடும்.

அதேபோல சினிமாக்காரர்கள் எங்கு சென்றாலும் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்கள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் என்ற போராளி இல்லை. அதற்கு உறுப்பினர்களே காரணம். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் எப்படி போராளி தலைவனாக முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் கூறுகையில், "இந்த விழாவில் நடித்த நண்பர்கள் யோகி பாபு, நிதின் சத்யா மற்றும் இதர நடிகர் நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர்கள் இல்லாதது வருந்தத்தக்க நிகழ்வு, கண்டிக்கத்தக்க செயல். நான் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இது இரண்டு ஹீரோக்களின் கதை. படத்தில் யோகி பாபு வருகிறார். இந்தப் படத்தில் நடித்த பிறகு டப்பிங் பேச மறுத்துவிட்டார். நான்தான் சமரசம் செய்து அவர்களை பேச வைத்தேன். தயாரிப்பாளருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நீங்கள் நடித்த படத்தை பற்றி தவறாக பேசக்கூடாது. படத்தின் ரிலீசுக்கு உதவி செய்து தயாரிப்பாளரின் கஷ்டங்களுக்கு தோள் கொடுத்திருக்க வேண்டும். அதன் பிறகு நடிக்கவில்லை என்று சொல்லித் தவிர்க்கக் கூடாது. சினிமாவில் வளர்ந்துள்ள நடிகர் யோகி பாபு இப்படி செய்யக் கூடாது" என்றார்.

Updated On: 6 Dec 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்