/* */

'நண்பர்'களாக நடிகர்கள்; 'எதிரி'களாக ரசிகர்கள் - தமிழ் சினிமாவில் தொடரும் வினோதம்

clash between vijay ajith fans-நடிகர் விஜய் - அஜித் இருவருமே, தங்களுக்குள் நண்பர்களாக நட்பு பாராட்டி வருகின்றனர். ஆனால், அவர்களது ரசிகர்கள், எதிரிகளாக சண்டையிட்டு கொள்கின்றனர்.

HIGHLIGHTS

நண்பர்களாக நடிகர்கள்; எதிரிகளாக ரசிகர்கள் - தமிழ் சினிமாவில் தொடரும் வினோதம்
X

 clash between vijay ajith fans- நடிகர்கள் அஜித்- விஜய்.

clash between vijay ajith fans, Vijay's Varisu to clash with Ajith's Thunivu on Pongal- கடந்த 2014ம் ஆண்டு விஜய் நடித்த 'ஜில்லா' படமும், அஜித் நடித்த 'வீரம்' படமும் ஒரே நாளில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே, பெரிய வெற்றியை பெற்றது.

அதற்கு பிறகு தற்போது, 8 ஆண்டுகள் கழித்து, விஜய் நடித்துள்ள 'வாரிசு' படமும், அஜித்தின் 'துணிவு' படமும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இரண்டு படங்களும் களத்தில், மோத இருக்கிறது.


'வாரிசு' படத்தில் விஜய் உடன் நடித்துள்ள நடிகர் ஷாம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'விஜய்யிடம் போனில் நான் பேசும்போது, அஜித் நடித்த 'துணிவு' படமும், பொங்கலுக்குதான் ரிலீஸ் ஆகிறது என்று கூறினேன். அதற்கு அவர், ' அதனால் என்ன, அவரும் நம் நண்பர்தானே, அவரது படமும் வரட்டும். அவருடைய படமும் நன்றாக ஓடினால் சந்தோஷம்தான்,' என்று விஜய் கூறினார்' என ஷாம் தெரிவித்து இருந்தார்.

'துணிவு' படத்தின் இயக்குனர் ஹெச் வினோத், 'விஜய், அஜித் இரண்டு நட்சத்திரங்களும், மிக கடுமையான உழைப்பால்தான், இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள இரண்டு படங்களுமே, வெற்றி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்,' என்று கூறியுள்ளார்.

ஆனால், இவர்களது படம் ரிலீஸ் செய்யப்படும் காலகட்டங்களில், விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவருமே மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வது வழக்கமான நிகழ்வாக மாறி விட்டது. தற்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் என்பதால் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி போய்விட்டது.


சமீபத்தில் வெளியான விஜய்யின் 'ரஞ்சிதமே' பாடலை விட, தற்போது வெளியான 'சில்லா சில்லா' அஜித் பாடல் சில மணிநேரத்திலேயே அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில், 'துணிவில்லா வாரிசு' மற்றும் 'வாரிசிடம் குனிவு' என்ற 'ஹாஷ் டேக்' ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.


அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் - சிவாஜி நண்பர்களாக இருந்தும், அவர்களது ரசிகர்கள் பிரிந்துதான் நின்றனர். அதே போல், ரஜினியும் - கமலும் மிக நெருங்கிய நண்பர்கள். இப்போதும், விழா மேடைகளில், ஒருவரை ஒருவர் பாராட்டி, புகழ்ந்து பேசி வருகின்றனர். நல்ல கதை அமைந்தால், இருவரும் இணைந்து நடிப்பதில், ஆர்வமாக உள்ளனர். ஆனால், ஒரு காலகட்டத்தில், ரஜினி - கமல் ரசிகர்களிடையே இதே போன்ற மோதல் போக்கு இருந்தது. அதே நிலையில், தொடர்ச்சியாக, இப்போது விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்கின்றனர். ஆனால், விஜய் - அஜித் நண்பர்களாக உள்ளனர். இதை ரசிகர்கள் உணர வேண்டும்.

Updated On: 12 Dec 2022 8:20 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...