/* */

சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் இதோ

HIGHLIGHTS

சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
X

ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான "சந்திரமுகி 2" நேற்று (செப்டம்பர் 28) வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன. படம் எப்போது வெளியாகும் திரையரங்கம் எப்போது ஃபுல்லாகும் என படக்குழு காத்திருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படம் ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, பிரபு நடிப்பில் வெளியான சந்திரமுகி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 ஆண்டு முழுக்க திரையரங்குகளில் ஓடியது. படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாய்ண்டாக ரஜினி, வடிவேலு காமெடியும், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் பேசப்பட்டது.

இந்நிலையில் அதே பாணியில் உருவாக்கப்படும் என்று கூறப்பட்ட சந்திரமுகி 2ம் பாகம் படம் குறித்த விமர்சனங்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. ஜோதிகா மற்றும் ரஜினிகாந்த் நடித்த முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் கதாபாத்திரங்கள் சரியாக உருவாக்கப்படவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பை பலரும் விமர்சித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த ஒரு கதாபாத்திரத்தை எப்படி சொதப்பி வைத்திருக்கிறார் என்று பலரும் பேச, அதுமட்டும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமையவில்லை, படத்தில் கதையே இல்லை என்று கூறுகின்றனர். சந்திரமுகி படத்தின் கதையை அப்படியே எழுதி சில மாற்றங்களை செய்து அதில் கதாபாத்திரங்களை மாற்றி சொதப்பி வைத்துள்ளனர்.

படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகம் வெளியானபோது முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ராகவா லாரன்ஸ் படத்துக்கு இது டீசன்ட்டான வசூல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Chandramukhi 2 Box Office Collection WorldWide - 7.5 Crores

Chandramukhi 2 Box Office Collection TamilNadu - 4.5 Crores

  • Chandramukhi 2 Box Office Collection Day 1 - 7.5 Crores
  • Chandramukhi 2 Box Office Collection Day 2 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 3 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 4 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 5 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 6 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 7 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 8 -
  • Chandramukhi 2 Box Office Collection Day 9 -

இந்தப் படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களும் குவிந்துள்ளன. "இது பேய் படமா? என்ன இது வாசு சார்?", "சந்திரமுகி முதல் பாகத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறீர்களே, இது என்ன தெலுங்கு படமா, ராகவா லாரன்ஸ் உடலில் பாலய்யா ஆவி புகுந்துவிட்டதோ ", "ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் சரியில்லை" போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சந்திரமுகி 2 படம் ஓரளவு டீசண்ட்டான வசூலை ஈட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் நாள் வசூல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால், படம் நீண்ட நாட்களுக்கு ஓடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Updated On: 29 Sep 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்