/* */

'ஆதிபுருஷ்' படத்துக்கு எதிராக வழக்கு; நடிகர் பிரபாஸ்க்கு சோதனை மேல் சோதனை

Case Filed Against Prabhas Movie- நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர், கடந்த 2ம் தேதி அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது. ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' படம், ராமாயணத்தை பின்னணியாக கொண்டு உருவான இப்படத்துக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக வழக்கு; நடிகர் பிரபாஸ்க்கு சோதனை மேல் சோதனை
X

case filed against prabhas movie- நடிகர் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு எதிராக வழக்கு.

Case Filed Against Prabhas Movie-'பாகுபலி' படம் மூலம், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகம் 1 மற்றும் 2 என இரண்டு பகுதிகளாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதன்பின், தொடர்ந்து மன்னர் கால புராண படங்களை எடுப்பதில், இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதுபோன்ற வரலாற்று படங்களில் நடிக்க, நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் வெளியான, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வம் பாகம் 1' படம் வெற்றி பெற்று, வசூல் மழை பொழிந்து வருகிறது.

ஆனால், 'பாகுபலி' வெற்றிக்கு பின், சமீபமாக பிரபாஸ் நடித்த படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' டீசர் நெட்டிசன்களால் 'ட்ரோல்' செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபாஸ் நடிப்பில், இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் 2ம் தேதி வெளியானது. இந்தப் படம் 2023 ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' டீசரை நெட்டிசன்கள் 'ட்ரோல்' செய்தனர். ஏற்கனவே பிரபாஸின் படங்கள் வரிசையாக தோல்வியடைந்து வரும் நிலையில், ஆதிபுருஷ் டீசர் ட்ரோல் செய்யப்பட்டது, பிரபாஸ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

'ஆதிபுருஷ்' படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். சைப் அலிகானை, ராவணனாக நடிக்க வைத்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இஸ்லாமியரான சைப் அலிகான், எப்படி ராவணனாக நடிக்கலாம் என சர்ச்சை எழுந்தது. அதேபோல், ஹனுமான் தோல் ஆடை அணிந்திருப்பதா என்றும் கேள்விகள் எழுந்தன. இதனால், 'ஆதிபுருஷ்' படம் வெளியாகும் போது, பல தடைகள் வரும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, 'ஆதிபுருஷ்' டீசரை சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவும் கலாய்த்திருந்தார். தனது 'Bheeshm International' யூடியூப் சேனலில், 'ஆதிபுருஷ்' டீசரில் வரும் பாத்திரங்களின் சித்தரிப்பு கேள்விக்குரியதாக உள்ளன. எந்த பாத்திரங்களும் இயல்பாகவே இல்லை எனவும் கூறியிருந்தார். இதுபோன்ற படம் எடுத்தால், கதையின் பிம்பத்தையும் பார்வையாளர்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் எனவும் காட்டமாக விமர்சித்து இருந்தார்.


இந்நிலையில், 'ஆதிபுருஷ்' டீசருக்கு எதிராக டெல்லியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழக்கில், இலங்கையைச் சேர்ந்த ராவணன் சிவபக்தர் எனவும் அவர் 64 கலைகள் கற்றவர். இந்நிலையில், ராவணனுக்கு ஜாக்கெட் அணிந்து, நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் டீசரில், தவறாக காட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய செயலானது வரலாற்றை மாற்றியமைக்கும் எனக் கூறி, டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Oct 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி